செய்திகள் :

Doctor Vikatan: மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போதுஎகிறும் BP; கட்டுப்படுத்த முடியுமா?

post image

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 60 வயதாகிறது. எப்போது எந்தப் பிரச்னைக்காக மருத்துவரைப் பார்க்கப் போனாலும் அவருக்கு BP அளவு தாறுமாறாக அதிகரிக்கிறது. மருத்துவர் BP பார்த்துவிட்டு, குறைத்துவிட்டு வரும்படி திருப்பி அனுப்புகிறார். மற்ற நேரங்களில் அம்மாவுக்கு BP அளவு நார்மலாகவே இருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது, இதற்கு சிகிச்சை தேவையா?

பதில் சொல்கிறார் சென்னையைச்  சேர்ந்த  நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி. 

குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி

ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தத்தில் 'எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Essential hypertension),  'நான்எசென்ஷியல் ஹைப்பர்டென்ஷன்' (Non-essential hypertension), 'வொயிட்கோட் ஹைப்பர்டென்ஷன்' (White coat hypertension) என பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டது.

இதில் நீங்கள் குறிப்பிடுவது 'வொயிட்கோட் ஹைப்பர் டென்ஷன்' வகையில் வருவது. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு இயல்பாக BP அளவு நார்மலாகவே இருக்கும்.  ஆனால், கிளினிக் அல்லது ஹாஸ்பிட்டலுக்கு வரும்போது மட்டும் BP அளவு சற்று அதிகரித்துக் காணப்படும். அதற்காக அது ரொம்ப அதிகமாகவெல்லாம் போகாது. நார்மல் அளவைவிட சற்று அதிகரிக்கும், அவ்வளவுதான்.

உதாரணத்துக்கு, நார்மல் அளவில், இதயத்துடிப்பின்போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் சிஸ்டாலிக் (Systolic pressure) பிரஷர் 120 என்றும், இதயத்துடிப்புக்கு இடையே ஏற்படும் டயஸ்டாலிக் (Diastolic blood pressure) பிரஷர் 80 என்றும் வைத்துக்கொள்வோம். இவர்களுக்கு மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணத்தில் மட்டும் 120 என்பது 130-140 என்ற அளவிலும், 80 என்ற அளவு 85-90 என்ற அளவிலும் அதிகரிக்கலாம்.

முதல்முறை ஒரு மருத்துவரைச் சந்திக்க வரும் நோயாளியின் பிபி அளவை வைத்து மருத்துவர் எந்த முடிவுக்கும் வர மாட்டார்.

அதனால்தான் முதல்முறை ஒரு மருத்துவரைச் சந்திக்க வரும் நோயாளியின் பிபி அளவை வைத்து மருத்துவர் எந்த முடிவுக்கும் வர மாட்டார். அந்த நோயாளிக்கு பிபி அதிகமாக இருக்கும்பட்சத்தில், முதலில் அவரது உடல்பருமனைப் பார்ப்போம். உடல் எடை அதிகமிருந்தால் அதைக் குறைக்க அறிவுறுத்துவோம்.

உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள அறிவுறுத்துவோம். கூடவே, ஜங்க் ஃபுட்ஸை தவிர்ப்பது, வாக்கிங் செல்வது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருப்பது போன்ற வாழ்வியல் மாற்ற அறிவுரைகளைக் கொடுப்போம்.

முதல் விசிட்டிலேயே ஒரு நபரின் பிபி அளவு அதிகரித்துக் காணப்படுவதை வைத்து அதைக் குறைக்க எந்த மருத்துவரும் மருந்து, மாத்திரைகளைப் பரிந்துரைக்க மாட்டார். அதுவே, அந்த நபர், தலைச்சுற்றல், தலைவலி, முதுமை, இணை நோய்கள் என அறிகுறிகள் மற்றும் பிரச்னைகளுடன் வரும்போதும், பிபி அளவு 150-160க்கும் மேல் இருப்பது என்ற நிலையில் மட்டும் மருந்துகள் கொடுப்போம்.

BP

சம்பந்தப்பட்ட நோயாளிளை இரண்டு-மூன்று வாரங்கள் கழித்து வரச் சொல்வோம். அப்போதும் பிபி குறையாமல் அப்படியே இருந்தால் இரண்டு கைகள், இரண்டு கால்களில் செய்யப்படுகிற 'ஃபோர் லிம்ப் பிளட் பிரஷர்' (Four-limb blood pressure) அளவைப் பார்ப்போம். அதிலும் அசாதாரணம் தெரிந்தால், பிற ரத்தப் பரிசோதனைகள், கொலஸ்ட்ரால், கிரியாட்டினின் அளவுகளைப் பரிசோதிக்கச் சொல்வோம். அதற்கேற்பவே மருந்துகள் கொடுப்போம். அதுவும் வயதுக்கேற்ப வேறுபடும். எனவே, 'வொயிட்கோட் ஹைப்பர்டென்ஷன்' என்பது பரவலான பிரச்னையல்ல. பயப்பட வேண்டிய பிரச்னையும் அல்ல. மேற்குறிப்பிட்ட முறைகளில் அதை அணுகலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

``பயிற்சி, ஊக்கம் கொடுத்தால் ஆப்பிள் சாகுபடியில் வருவாய் ஈட்ட முடியும்'' -கொடைக்கானல் விவசாயி சாதனை

கொடைக்கானல் கவுஞ்சி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி தன்னுடைய நிலத்தில் ஆப்பிள், குங்குமபூ போன்றவற்றை நட்டு வைத்து 3 வருட காலம் பராமரித்து தற்போது ஆப்பிள் சாகுபடி செய்வதற்கு தயாராக உள்ளார். ஜம்மு காஷ்மீரின்... மேலும் பார்க்க

MP: `90 டிகிரியில் திரும்பும் அபாயகரமான மேம்பாலம்' -கடும் எதிர்ப்பால் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் அந்த மேம்பாலங்கள் சில நேரங்களில் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல் கட்டிவிடுவார்கள். அது போன்ற ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தி... மேலும் பார்க்க

``நான் ஒரு தீவிர இந்து; மதச்சார்பற்றவராக இருக்க முடியாது.." - RSS பாணியில் பேசிய அஸ்ஸாம் முதல்வர்!

"சோசலிசம்" மற்றும் "மதச்சார்பின்மை" என்ற சொற்களை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான "பொற்காலம்" இது என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருக்கிறார். 'தி எமர்ஜென்சி டைரீஸ் - இயர்ஸ் தட்... மேலும் பார்க்க

திருப்புவனம் லாக்கப் மரணம்: ``பணியிடைநீக்கம் மட்டுமே நீதியா? கொலை வழக்கு பதியாதது ஏன்?'' - சீமான்

கடந்த 4 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட காவல்துறை விசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: இந்தி திணிப்பு வாபஸ்; ரத்து செய்யப்பட்ட தாக்கரே சகோதரர்கள் பேரணி.. பின்னணி என்ன?

மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி கற்றுக்கொடுக்கப்படும் என்றும், அது இந்த ஆண்டே நடைமுறைக்கு வரும் என்றும் அரசாணை பிறப்பித்து இருந்தது. இதற்கு எதிர்க்கட்... மேலும் பார்க்க

`பாஜக-வுடன் கூட்டணி வைத்தது ஏன்?' - கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக-வின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்... மேலும் பார்க்க