செய்திகள் :

காவல் துறை அத்துமீறல்..! சிவகங்கை இளைஞர் அஜித்தை தாக்கும் விடியோ வெளியீடு!

post image

சிவகங்கையில் காவல் துறையினர் தாக்கியதில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாரை போலீஸார் கொடூரமாகத் தாக்கும் விடியோ வெளியாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டதால் பலியானதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அஜித் குமார் காவல் துறையினரிடமிருந்து தப்பிச் சென்றபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாலேயே காயம் ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் 18 காயங்கள் இருந்ததும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

யாருமில்லாத கோயிலுக்குப் பின்புறமுள்ள தோட்டத்தில், கடந்த 28 ஆம் தேதி காவலாளி அஜித்குமாரை, கம்பத்தில் கட்டிவைத்து காவல் துறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான விடியோ ஒன்றை அஜித்குமாரின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

மேலும், அந்த விடியோவில் சீருடையணியாத காவல் துறை அதிகாரிகள் இருவர் அஜித் குமாரைக் கட்டிவைத்து லத்தியால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்குள் பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று திருபுவனம் குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

A video has been released showing police brutally assaulting Ajith Kumar, a youth who died after being attacked by police in Sivaganga.

இதையும் படிக்க... விசாரணை என்ற பெயரில் கொலை! அடிப்பதற்காகவா காவல்துறை? - நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி

வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர்! ரூ.12,000 ஊக்கத்தொகை!

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் கலந்து கொண்டு, "வெற்றி நிச்சயம்" திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1)தொடங்கி வை... மேலும் பார்க்க

பரமக்குடி - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை மத்திய ... மேலும் பார்க்க

அரசு ஊழியர்களுக்கு திருமண முன்பணம் உயர்வு! - அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் உயர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக் காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணம் ... மேலும் பார்க்க

தவெகவின் யானை சின்னத்துக்கு தடையா? ஜூலை 3 தீர்ப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கில் நாளை மறுநாள் (ஜூலை 3) சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.பகுஜன் சமாஜ் கொடியில் உள்... மேலும் பார்க்க

மாநிலம் தனது குடிமகனையே கொலை செய்துள்ளது! - நீதிபதிகள் வேதனை

பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளதாகவும் மாநிலம் தனது குடிமகனையே கொலை செய்துள்ளது எனவும் சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சிவகங்... மேலும் பார்க்க

இபிஎஸ் வீட்டிற்குச் செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் பதில்!

’இபிஎஸ் வீட்டிற்குச் செல்வீர்களா?’ என்று முதல்வர் ஸ்டாலினிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ’அந்தப் பகுதியில் இருந்தால் நிச்சயம் செல்வேன்’ என்று முதல்வர் பதில் அளித்தார்.திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் ம... மேலும் பார்க்க