செய்திகள் :

`மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி திணிப்பு வாபஸ்'-வெற்றிக்கூட்டத்தில் பங்கேற்கும் தாக்கரே சகோதரர்கள்!

post image

மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1-5வது வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பு மராத்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோரும் மாநில அரசின் இந்த உத்தரவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். வரும் 5ம் தேதி தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் சேர்ந்து இந்தி எதிர்ப்பு பேரணி நடத்தப்போவதாக தெரிவித்திருந்தனர். இந்தி எதிர்ப்புக்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதனால் திடீரென மாநில அரசு மும்மொழி திட்டம் கைவிடப்படுவதாகவும், இந்தி கட்டாயமாக்கப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தது. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சஞ்சய் ராவுத்

இந்தி திணிப்பை மாநில அரசு கைவிட்டு இருப்பதால் தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் இந்தி எதிர்ப்பு பேரணியை கைவிடுவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் இந்தி திணிப்பு கைவிடப்பட்டது மராத்தியர்களுக்கு கிடைத்த வெற்றி என்று தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் தெரிவித்தனர். அதேசமயம் தாக்கரே சகோதரர்கள் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து போராட்டத்தில் பங்கேற்க இருந்ததை மாநில அரசு தடுத்து நிறுத்தியதாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்தி திணிப்பு எதிர்ப்பு பேரணி இப்போது வெற்றி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் என்று உத்தவ் தாக்கரே அறிவித்து இருந்தார். இந்த வெற்றிப்பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் சேர்ந்து கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே மராத்தி பிரச்னையில் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்படத்தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே தெரிவித்து இருந்தார். இதனால் அரசியல் ரீதியாக தொடர்ந்து தோல்வி, கட்சி உடைதல் என அடுத்தடுத்து சவால்களை சந்தித்து வந்த ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் மாநகராட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடுவர் என்று இரு கட்சி தலைவர்களும் சூசகமாக தெரிவித்திருந்தனர். அதனை தடுக்கவேண்டும் என்ற நோக்கிலும், மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டும் தான் இந்தி திணிப்பை மாநில அரசு கைவிடுவதாக அறிவித்தது.

ஆனால் இப்போது தாக்கரே சகோதரர்கள் வெற்றிபொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த பொதுக்கூட்டம் எங்கு நடக்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை. தாதர் சிவாஜி பார்க் உட்பட சில இடங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு மாநகராட்சியிடம் ஒப்புதல் பெற சிவசேனா(உத்தவ்) தலைவர்கள் முயன்று வருகின்றனர். இரு தலைவர்களும் இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதை உத்தவ் தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமான சஞ்சய் ராவுத் எம்.பி. உறுதிபடுத்தி இருக்கிறார். இது குறித்து சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில்,''இந்தி திணிப்பை மாநில அரசு திரும்ப பெற்றுக்கொண்டது மகாராஷ்டிரா மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே இந்தி திணிப்புக்காக 5ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த போராட்டம் இப்போது கொண்டாட்டமாக மாறி இருக்கிறது.

இதில் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் ஒரே மேடையில் பங்கேற்பார்கள்''என்று தெரிவித்தார். முன்னதாக சமூக வலைதளத்திலும் இது தொடர்பாக சஞ்சய் ராவுத் வெளியிட்டு இருந்த பதிவில் "மராத்திக்கான வெற்றிக்கூட்டத்தில் ஜெய் மகாராஷ்டிரா என்ற வெற்றி குழக்கத்துடன் தாக்கரே சகோதரர்கள் வருகிறார்கள்''என்று பதிவிட்டு இருந்தார். சிவசேனாவில் இருந்து ராஜ் தாக்கரே விலகிய பிறகு 20 ஆண்டுகள் கழித்து இருவரும் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர். வரும் அக்டோபர் மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தாக்கரே சகோதரர்கள் ஒன்று சேருவதால் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருகிறது.

அஜித்குமார் மரணம்: "போலீஸ் தாக்குதல்தான் காரணம் என அறிந்து வேதனையடைந்தேன்; CBI விசாரணை" - ஸ்டாலின்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

திருப்புவனம்: "ரொம்ப சாரிமா... நடக்கக் கூடாதது நடந்துவிட்டது" - அஜித்குமார் தாய்க்கு ஸ்டாலின் ஆறுதல்

திருபுவனத்தில் நகை காணாமல் போன புகாரில் அஜித்குமார் என்ற இளைஞரை தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியதில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.காவல்துறையின் இந்த எதேச... மேலும் பார்க்க

'பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்' - அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நம் முதலமைச்சர் ஆளுமை மிக்க முதலமைச்சராக இருக்கிறார். கோவை ம... மேலும் பார்க்க

சித்தராமையா Vs DK சிவக்குமார்: கர்நாடகா முதலமைச்சர் பதவி மோதல்; என்ன நடக்கிறது கர்நாடகா காங்கிரஸில்?

'அடுத்த முதலமைச்சர் யார்?'- இந்தக் கேள்வி தான், தற்போது கர்நாடகாவில் மையம் கொண்டுள்ளது. 'இதில் என்ன பிரமாதம் அங்கே தேர்தலாக நடக்கவிருக்கலாம்!' என்று கடந்துவிடாதீர்கள். கர்நாடகாவின் சட்டமன்ற தேர்தல் 20... மேலும் பார்க்க

`தமிழ்நாடு இரண்டாந்தர மாநிலமாக போகக்கூடாது; ஒரே குடையின்கீழ் ஒன்றிணைவதே நம் இலக்கு’ - துரைமுருகன்

வேலூரில் இன்று, தி.மு.க பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். துரைமுருகன் ப... மேலும் பார்க்க

'தென் ஆப்பிரிக்காவிற்கே சென்றுவிட வேண்டியது தான்' - மீண்டும் வலுக்கும் ட்ரம்ப் - மஸ்க் மோதல்!

'ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்' - இந்தப் பெயரை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உச்சரித்ததில் இருந்து தான், அவருக்கும், அவரது உற்ற நண்பன் எலான் மஸ்கிற்கு வாய்க்கால் வரப்பு தகராறு தொடங்கியது. இந்தப் பில்-ல... மேலும் பார்க்க