இந்தியா, சீனாவுக்கு 500 % வரி விதிக்கும் புதிய மசோதா! - அமெரிக்கா முன்மொழிவு
முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை 328 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் (ஜூலை 1) நிறைவடைந்தது.
குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெற்ற இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 418 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 369 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணிக்கு 537 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
537 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 208 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக வெலிங்டன் மசகட்ஸா 57 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் கிரைக் எர்வின் 49 ரன்களும், பிளெஸ்ஸிங் முஸராபானி 32 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஸ்ச் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கோடி யூசஃப் 3 விக்கெட்டுகளையும், கேசவ் மகாராஜ் மற்றும் டெவால்ட் பிரீவிஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அறிமுக வீரர் லுஹான் பிரிட்டோரியஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
South Africa won the first Test against Zimbabwe by a massive margin of 328 runs.
இதையும் படிக்க: சிஎஸ்கேவுக்கு விற்கப்படுகிறாரா சஞ்சு சாம்சன்?