செய்திகள் :

இந்தியா, சீனாவுக்கு 500 % வரி விதிக்கும் புதிய மசோதா! - அமெரிக்கா முன்மொழிவு

post image

ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது.

ரஷியாவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா முன்மொழியப்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சி எம்பி லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்தியா, சீனாவுடன் மிகச் சிறந்த வர்த்தகம் நடைபெறப் போகிறது என அமெரிக்கா கூறிவந்தது. இப்போது அந்த இரு நாடுகள் மீதும் 500 சதவிகிதம் வரை வரி விதிக்க புதிய மசோதா ஒன்றை முன்மொழிந்துள்ளது. இது இருநாடுகளுக்கும் பேரிடியாக வந்திறங்கியுள்ளது.

ரஷியாவை பொருளாதார ரீதியில் தாக்கும் விதமாக அமெரிக்க இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தள்ளுபடி விலையில் ரஷியாவிடம் கச்சா எண்ணெய்யை அதிகளவில் வாங்கக்கூடிய இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அதிகளவில் பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இதுகுறித்து கிரஹாம் கூறுகையில், “ரஷியாவிடமிருந்து பொருள்களை வாங்கிக் கொண்டு, உக்ரைனுக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், இந்த வரிவிதிப்பை எதிர்கொள்ளக்கூடும். இந்தியாவும், சீனாவும் ரஷிய அதிபர் புதினிடமிருந்து 70 சதவிகிதம் கச்சா எண்ணெய்யை வாங்குகின்றன” என்றார்.

ஒருவேளை கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் மற்றும் 500 சதவிகித வரி ஆகியவை இந்தியாவில் மருந்துகள், ஜவுளி, ஐடி சேவைகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரஷியாவிலிருந்து அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்துவந்திருந்த இந்திய, சமீபத்திய ஆண்டுகளாக கிட்டத்தட்ட 49 பில்லியன் யூரோ வரை ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து வருகிறது.

குடியரசுக் கட்சியின் கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் எம்பி ரிச்சர்ட் புளூமெண்டால் வழங்கப்பட்ட இந்த மசோதாவுக்கு 84 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா ஒருவேளை சட்டமாக மாறினால், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கக் கூடும். மேலும், இது மற்றொரு வர்த்தகப் போருக்கான துவக்கமாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

A proposed US Senate bill, backed by President Donald Trump, could impose 500% tariffs on countries, including India and China, that continue trading with Russia, Republican Senator Lindsey Graham said in an interview.

இதையும் படிக்க... கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்லவேண்டியிருக்கும்! - மஸ்க்கிடம் டிரம்ப் கறார்

பாகிஸ்தானில் வேகமெடுக்கும் போலியோ பரவல்! 2025-ல் அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தான் நாட்டில், 2025-ம் ஆண்டில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் வெவ்வேறு மாகாணங்களில் போலியோ தொற்று தொடர்ந்து பரவி வருகின்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! அரசு அதிகாரிகள் 4 பேர் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், அரசு அதிகாரிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஜௌர் மாவட்டத்தின்,... மேலும் பார்க்க

ஐரோப்பிய நாடுகளைத் தாக்கும் வெய்யில்! சிவப்பு எச்சரிக்கை! ஈஃபிள் கோபுரம் மூடல்

ஐரோப்பிய நாடுகளில் வெப்ப அலை வரும் நாள்களில் கடுமையாகும் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது. பிரான்ஸ் முதல் சுவிஸ் வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெப்ப அலை காரணமாக, ஈஃபிள் கோபுரத்தின் உச்சிப் ப... மேலும் பார்க்க

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ராணுவ விமானம் சோமாலியாவில் விபத்து!

சோமாலியா நாட்டில், அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சிறிய ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.சோமாலியாவில் அல் - ஷாபாப் கிளர்ச்சிப்படையினருக்கு எதிரா... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.அவாமி லீக் கட்சியின் தலைவர் ஹசீனா தலைமையிலான வங்கதேச அரசுக்கு எதி... மேலும் பார்க்க

சாட்ஜிபிடி-யை அதிகம் நம்ப வேண்டாம்! சொல்வது ஓபன்ஏஐ தலைவர்

சாட்ஜிபிடியை மக்கள் அதிகம் நம்ப வேண்டாம் என்று ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் தலைவர் சாம் ஆல்ட்மன் கேட்டுக்கொண்டுள்ளார்.ஓபன்ஏஐ-யின் அதிகாரப்பூர்வ பாட்காஸ்ட் அறிமுக விழாவில் பேசிய ஆல்ட்மன், சாட்ஜிபிடி... மேலும் பார்க்க