செய்திகள் :

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ராணுவ விமானம் சோமாலியாவில் விபத்து!

post image

சோமாலியா நாட்டில், அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சிறிய ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சோமாலியாவில் அல் - ஷாபாப் கிளர்ச்சிப்படையினருக்கு எதிரான உள்நாட்டுப் போரில், அரசுக்கு ஆதரவாக அமைதி காக்கும் பணியில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ராணுவம் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவிலுள்ள விமான நிலையத்தில், இன்று (ஜூலை 2) ஆப்பிரிக்க ஒன்றிய ராணுவத்தின் சிறிய ரக விமானம் தரையிறங்கும்போது, விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சோமாலியா அதிகாரிகள் அந்த தீயை அணைத்து, இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்தச் சம்பவம் குறித்தும், விபத்தில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டதா? என்பது குறித்தும் எந்தவொரு தகவலும் அந்நாட்டு அதிகாரிகள் தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை.

முன்னதாக, சோமாலியாவில் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் ராணுவத்தில், கென்யா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளின் படைகளும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

African Union military plane crashes in Somalia!

இதையும் படிக்க:

‘அடுத்த தலாய் லாமா தோ்ந்தெடுக்கப்படுவாா்’ -தலாய் லாமா உறுதி

‘தலாய் லாமா மரபு என்னுடைய மறைவுக்குப் பிறகும் தொடரும். அடுத்த தலாய் லாமாவை காடேன் போட்ராங் அறக்கட்டளை தோ்வு செய்யும்’ என்று 14-ஆவது தலாய் லாமா புதன்கிழமை கூறினாா். திபெத்திய பௌத்த மதத்தின் தலைவராகக்... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு சில ஆயுதங்களின் விநியோகம் நிறுத்தம் - அமெரிக்கா

உக்ரைனுக்கு சில ஆயுதங்கள் விநியோகிப்பதை நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முந்தைய ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் உக்ரைனுக்கு இந்த ஆயுதங்களை அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், அமெரி... மேலும் பார்க்க

காஸா போா் நிறுத்த நிபந்தனைகளை ஏற்றது இஸ்ரேல்!

காஸா போா் நிறுத்தத்துக்குத் தேவையான நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது குறித்து ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

எகிப்து: கப்பல் கவிழ்ந்து 4 போ் உயிரிழப்பு

எகிப்தின் சூயஸ் வளைகுடாவில் எண்ணெய் துரப்பண கப்பல் கவிழ்ந்ததில் 4 போ் உயிரிழந்ததனா்; 4 போ் மாயமாகினா். ராஸ் கரேப் நகருக்கு அருகே கவிழ்ந்த இந்தக் கப்பலில் 30 தொழிலாளா்கள் இருந்ததாகவும், 22 போ் மீட்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் வேகமெடுக்கும் போலியோ பரவல்! 2025-ல் அதிகரிக்கும் பாதிப்புகள்!

பாகிஸ்தான் நாட்டில், 2025-ம் ஆண்டில் போலியோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் வெவ்வேறு மாகாணங்களில் போலியோ தொற்று தொடர்ந்து பரவி வருகின்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! அரசு அதிகாரிகள் 4 பேர் கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில், அரசு அதிகாரிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஜௌர் மாவட்டத்தின்,... மேலும் பார்க்க