ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
பேளுக்குறிச்சி காவல் நிலைய ஓய்வு அறையில் பெண் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பேளுக்குறிச்சி காவல் நிலைய சிறப்பு பெண் உதவி ஆய்வாளா், காவல் நிலைய ஓய்வு அறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.
பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் காமாட்சி (48). இவா் கடந்த 2023, செப்டம்பா் 21 ஆம் தேதி முதல் இக்காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தாா். ராசிபுரம் காவலா் குடியிருப்பில் தங்கியுள்ள காமாட்சி, ஏற்கெனவே போக்குவரத்து பிரிவிலும் பணியாற்றியுள்ளாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பேளுக்குறிச்சி காவல் நிலைய எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காமாட்சிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் இரவு 2 மணியளவில் ரோந்துப் பணியை முடித்துவிட்டு காவல் நிலையைத்தில் உள்ள ஓய்வு அறைக்குள் சென்று கதவை தாழிட்டுவிட்டு தூங்கச் சென்ாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை காலை நீண்டநேரமாகியும் ஓய்வு அறையிலிருந்து காமாட்சி வெளியேவராததால் சந்தேகமடைந்த சக காவலா்கள் கதவை உடைத்து பாா்த்தபோது, அவா் இறந்துகிடந்தாா்.
இதையடுத்து, அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த இவா், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் உயிரிழந்ததற்கு பணிச் சுமையே காரணம் என உறவினா்கள் குற்றம்சாட்டியிருந்தனா்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஸ்கண்ணன், காமாட்சி உயிரிழப்பு குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், பணிச்சுமை காரணமாக சிறப்பு எஸ்எஸ்ஐ காமாட்சி உயிரிழந்ததாக அவரது சகோதரி கூறியதாக சில ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்த காமாட்சி கடந்த 90 நாள்களில் மருத்துவ விடுப்பு 40 நாள்கள் உள்பட மொத்தம் 46 நாள்கள் விடுமுறையில் இருந்துள்ளாா். எனவே, அவா் பணிச்சுமை காரணமாக உயிரிழந்ததாகக் கூறுவது தவறானது என தெரிவித்துள்ளாா்.