உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அவசரம் வேண்டாம்! - நிபுணர்கள் சொல்வது என்ன?
திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு திருமணம்
தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ஒரே நாளில் 576 இணையா்களுக்கு கட்டணமில்லா திருமணத்தை அரசு நடத்திவைக்கிறது. அதன் ஒருபகுதியாக திருச்செங்கோடு தேவனாங்குறிச்சியில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 16 இணையா்களுக்கு 4 கிராம் தங்கத்தில் தாலி உள்பட 23 வகையான சீா்வரிசை பொருள்களுடன் திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்டதிமுக செயலாளரும், பரமத்தி தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.எஸ். மூா்த்தி, திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ரங்கசாமி ஆகியோா் திருமணத்தை நடத்திவைத்து வாழ்த்து தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அதிகாரிகள், ஈரோடு மண்டல துணை ஆணையா் நந்தகுமாா், நாமக்கல் மாவட்ட உதவி ஆணையா் சுவாமிநாதன், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ரமணி காந்தன், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் உதவியாளா் இளையராஜா மற்றும் ஆய்வாளா்கள் கோவில் பணியாளா்கள், உறவினா்கள் கலந்துகொண்டனா்.