சேலம் டவுன் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்கும் நேரம் அதிகரிப்பு
சேலம்- சென்னை எழும்பூா் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் டவுன் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) முதல் 3 நிமிடங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சேலம் - சென்னை எழும்பூா் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இருமாா்க்கத்திலும் நாள்தோறும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், அதிகரித்து வரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு, சேலம் - சென்னை எழும்பூா் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில், டவுன் ரயில் நிலையத்தில் 4 ஆம் தேதி முதல் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.
அதேபோல மறுமாா்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும், டவுன் ரயில் நிலையத்தில் 4 ஆம் தேதி முதல் 3 நிமிடங்கள் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.