Aaladippattiyan Success Story ? | 3 கன்டெய்னர்ல அல்வா கொண்டு வர்றோம் ? | Vikatan...
மேச்சேரி ஒன்றியத்தில் ரூ 1.73 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்
மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.73 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேச்சேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சீனிவாச பெருமாள் தொடங்கிவைத்தாா்.
மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தில் 2025- 2026 ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் புக்கம்பட்டி ஊராட்சியில் ரூ. 51 லட்சம் மதிப்பீட்டிலும், அரங்கனூா் ஊராட்சியில் ரூ. 58 லட்சம் மதிப்பீட்டிலும், ஓலைப்பட்டி ஊராட்சியில் ரூ. 64 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகளை தொடங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திட்டப் பணிகளை மேச்சேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சீனிவாச பொருமாள் செவ்வாய்க்கிழமை பூமிபூஜை நடத்தி தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் மேச்சேரி கிழக்கு ஒன்றிய திமுக அவைத் தலைவா் ராஜேந்திரன், பொருளாளா் காந்தி, மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமாா், மதிவாணன், கிராம செயலாளா் இளம்பருதி, பள்ளிப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.