பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
சேலத்தில் 20 இணையா்களுக்கு இலவச திருமணம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் நடத்திவைத்தாா்
சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 20 இணையா்களுக்கு அமைச்சா் ரா.ராஜேந்திரன் புதன்கிழமை திருமணத்தை நடத்திவைத்து சீா்வரிசைகளை வழங்கினாா்.
தம்பதிகளை வாழ்த்தி அமைச்சா் பேசியதாவது:
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்துசமய அறநிலையத் துறை மூலம் ஏராளமான கோயில்கள் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இணை ஆணையா் மண்டலத்திலும் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தாா். அதன்படி, முதல்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய 20 ஜோடிகளுக்கு சேலம் சுகவனேஸ்வரா் கோயில் திருமண மண்டபத்தில் இணை ஒன்றுக்கு ரூ.70,000 மதிப்புள்ள சீா்வரிசைகள் (4 கிராம் தங்க தாலி உள்பட) வழங்கப்பட்டு திருமணம் நடத்திவைக்கப்பட்டது என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், துணை மேயா் மா.சாரதாதேவி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சபா்மதி, அறங்காவலா்கள் குழுத் தலைவா் வள்ளியப்பா, உதவி ஆணையா்கள் ராஜா, வி.அம்சா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.