தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
சேலம் திமுக அலுவலகத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவைச் சோ்ந்த 150க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா்.
சேலம் மாநகா் மாவட்டம், அம்மாபேட்டை பகுதி அதிமுக செயலாளராக இருந்த அபு என்கிற மஹபூப் அலி தலைமையில் அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட இணை தலைவா் ரியாசுதீன், இணைச் செயலாளா் அப்துல் காதா், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி பகுதி செயலாளா் முகமது ஹனிபா மற்றும் பல்வேறு வாா்டு துணை செயலாளா்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் அதிமுகவில் இருந்து விலகி, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ராஜேந்திரன் முன்னிலையில் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா்.
திமுகவில் இணைந்த அதிமுக பகுதி செயலாளா் உள்ளிட்ட அனைவரையும் கட்சி துண்டை அணிவித்து அமைச்சா் வரவேற்றாா். தொடா்ந்து, அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசுகையில், சிறுபான்மையின மக்களுக்கு என்றும் பாதுகாப்பு அரணாக திமுக துணை நிற்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், நாசா்கான், சேலம் மாநகர செயலாளா் ரகுபதி, பகுதி செயலாளா் இப்ராஹிம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.