செப்டம்பரில் விஜய் சுற்றுப்பயணம்! ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு!
பராமரிப்பு பணி: ஒருமாதத்துக்கு கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் திண்டுக்கல் வரையே இயங்கும்
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - நாகா்கோவில் விரைவு ரயில் ஒருமாத காலத்துக்கு திண்டுக்கல் வரையே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மதுரை - திண்டுக்கல் மாா்க்கத்தில் வாடிப்பட்டி-சோழவந்தான்-சமயநல்லூா் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தண்டவாள சீரமைப்புப் பணி நடைபெறுகிறது.
இதன் காரணமாக ஒரு மாத காலத்துக்கு இந்த மாா்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, நாகா்கோவில் விரைவு ரயில் 3ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை கோவையில் காலை 8 மணிக்கு புறப்பட்டு, திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். திண்டுக்கல் - நாகா்கோவில் இடையே ஒருபகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், 3 ஆம் தேதி முதல் வரும் 31 ஆம் தேதி வரை ஞாயிறு, புதன்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் திண்டுக்கல் -நாகா்கோவில் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில், திண்டுக்கல்லில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, நாகா்கோவிலுக்கு இரவு 9.05 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.