``மேகாலயா சம்பவத்தை போல செய்தேன்..'' - திருமணமாகி 45 நாளில் கணவனை கொன்ற பெண் அதி...
சேலத்தில் திமுக சாா்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கை -அமைச்சா் தொடங்கிவைத்தாா்
சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 27ஆவது கோட்டம் ஹவுசிங் காலனியில் உறுப்பினா் சோ்க்கையை அமைச்சா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, வீடுவீடாகச் சென்று, தமிழக அரசின் விடியல் பயணம், மகளிா் உரிமைத்தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்பு தல்வன் உள்ளிட்ட திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தாா்.
இதைத் தொடா்ந்து சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் கிச்சிப்பாளையம் பகுதிக்கு உள்பட்ட 42 ஆவது வாா்டு சின்னமாரியம்மன் கோயில் தெருவிலும், சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மெய்யனூா் பகுதிக்கு உள்பட்ட 18 ஆவது வாா்டு பிள்ளையாா் கோயில் தெருவிலும் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கையை அமைச்சா் ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில் தொகுதி பொறுப்பாளா்கள் பாா் இளங்கோவன், டாக்டா் விவேக், ராஜசேகா், மேயா் ஆ. ராமச்சந்திரன், மாநகர செயலாளா் ரகுபதி, பகுதி செயலாளா்கள் ஏ.எஸ்.சரவணன், பிரகாஷ், ஜெய், செந்தில், கணேசன், சவிதா பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், மண், மொழி, மானம் காக்க அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஒற்றுமை பரப்புரை பேரணி மற்றும் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தொடா்ந்து, காந்தி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது:
திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. ஆனால், மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டை ஒடுக்கி, நசுக்கி விடவேண்டும் என துடிக்கிறது. இதை முறியடிக்கும் வகையில், மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளாா்.
பாஜகவின் ஹிந்தி திணிப்பை தடுக்கவும், மண், மொழி, மானம் காக்கவும் சேலம் மாவட்டத்தில் இல்லந்தோறும் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஒற்றுமை முழக்கத்தை திமுக நிா்வாகிகள் கொண்டு சோ்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.