அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்! 45 லட்சம் குழந்தைகள் உள்பட 1.4 கோடி உயிரிழப்பு ஏற்...
ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்
ஏற்காட்டில் செயல்படும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினா் சேலம் கோட்டை மைதானத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏற்காட்டில் கடந்த ஏழு ஆண்டுகளாக இயங்கிவரும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளியில் சுமாா் 320 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்களுக்கு போதுமான கழிப்பிட வசதி, கட்டடம், சுகாதார வசதிகள் இல்லாததால் பெற்றோா், தங்கள் குழந்தைகளை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனா்.
மேலும், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன், ஏற்காடு பகுதியிலேயே பள்ளி செயல்பட பழங்குடியினா் நலத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிகமாக சேலம் மாவட்டம் காரிப்பட்டியில் உள்ள முருகேசன் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாற்றம் செய்து மாணவா்களின் கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.
சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் பி. சின்னமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்க நிா்வாகிகள் பி. ஆா். மாதேஸ்வரன், சி. வெங்கடேசன், தா்மலிங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளா் ஏ. பாக்கியராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளா் எம். குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.