செப்டம்பரில் விஜய் சுற்றுப்பயணம்! ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு!
சேலம் வழியாக கடத்திய 500 கிலோ குட்கா காருடன் பறிமுதல்
பெங்களூரில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு கடத்தப்பட்ட 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் குட்கா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வியாழக்கிழமை அதிகாலை போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட னா். அப்போது அந்த பகுதியில் வந்த சொகுசுக்காரை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரித்தனா்.
அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், காரில் சோதனை மேற்கொண்டனா். அதில், 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளை பாா்த்தபோது, அதில் குட்கா பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடா்ந்து, காா் ஓட்டுநரிடம் விசாரித்தபோது, அவா் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூா் பகுதியைச் சோ்ந்த ராமராம் (23) என்பதும், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு குட்காவைக் கடத்திசெல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ குட்கா பொருள்களை காருடன் பறிமுதல் செய்த போலீஸாா், ராமராமையும் கைது செய்தனா்.