லெவல் 2 அடாஸ் வசதியுடன்.. மஹிந்திராவின் புது வேரியண்ட்!
மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ என் லெவல் 2 அடாஸ் வேரியண்டை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள் என்ன?
ஸ்கார்பியோ என் அடாஸ் வேரியண்டில் புதிய அம்சமாக லெவல் 2 அடாஸ் இடம் பெற்றுள்ளது. இதில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் நிறைந்துள்ளன.
இது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் என இருமுறைகளிலும் உள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது. இதன் 6 ஸபீடு ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 400 எம்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.
பெட்ரோலை பொருத்தவரை அதிகபட்சமாக 203 பி.எஸ் பவரையும், 370 என்.எம் டார்க்கையும், டீசல் அதிகபட்சமாக 175 பி.எஸ் பவரையும், 370 என்.எம் டார்கையும் வெளிப்படுத்தும். இது ஆர்18 டைமன்ட் அலாய்வ் வீல், சோனி ஆடியோ சிஸ்டம், முன்புற கேமரா, முன்புற பார்க்கிங் சென்சார். எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் வசதியும் உள்ளது.
இது முன்புறம் வாகனம் மோதுவதை எச்சரிக்கும் அமைப்பு, தானியங்கி அவசர ப்ரேக்கிங், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் பைலட் அசிஸ்ட், சிக்னலை உணர்த்தும் அமைப்பு, ஹைபீம் அசிஸ்ட் உள்பட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளன.
அடாஸ் வேரியண்ட்டின் ஆரம்ப ஷோரூம் விலை ரூ.21.35 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.