செய்திகள் :

சிஎன்ஜி ரெட்ரோபிட்: நிசான் மேக்னைட் காரின் புதிய ஸ்டைல்!

post image

நிசான் நிறுவனம் தனது மேக்னைட் காரில் சி.என்.ஜி ரெட்ரோபிட்டெட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளரைக் கவரும் வகையில் புதிய ஸ்டைல் ஒன்றை நிசான் நிறுவனம் கையாண்டுள்ளது. அதன்படி, நிசான் மேக்னைட் காரை வாங்குவோர் தங்கள் காரில் சி.என்.ஜி ரெட்ரோபிட்டை பொருத்திக் கொள்ளலாம்.

நிசான் நிறுவனம் 7 மாநிலங்களுக்கு டீலர்ஷிப் அளவில் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக தில்லி-என்சிஆர், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், கேரளம் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள டீலர்ஷிப்களில் மட்டும் இந்த ரெட்ரோ பிட்மென்ட் அமலுக்கு வருகிறது. அடுத்தக் கட்டமாக மற்ற மாநிலங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

• சிஎன்ஜி ரெட்ரோபிட் வாரண்டி 3 ஆண்டுகள் (அ) 1 லட்சம் கீ.மீ வரை

• 10 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்

• ஆட்டோ கியர்பாக்ஸ் வேரியண்ட்கள், டர்போ சார்ஜ்டு என்ஜின் கொண்ட வேரியண்ட்களில் சிஎன்ஜி கிட் பொருத்த முடியாது.

இந்தியாவில் இதன் விலை ரூ. 6.89 லட்சம் முதல் தொடங்குகிறது. மேக்னைட் காரில் ரூ.75 ஆயிரம் கூடுதலாக செலுத்தில் சிஎன்ஜி கிட்களை பொருத்திக் கொள்ளலாம்.

எம்ஜி விண்ட்சர் எக்ஸ்குளூசிவ் புரோ.. ரூ.17.25 லட்சத்தில்!

மோரிஸ் கரேஜஸ் மோட்டர்(எம்ஜி) நிறுவனம் விண்ட்சர் எலெக்ட்ரிக் காரில் எக்ஸ்குளூசிவ் புரோ என்கிற வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வேரியண்டில் 52.9 கிலோவாட் ஹவர் திறன் ... மேலும் பார்க்க

ரூ.9.52 லட்சத்தில் கவாசாகியின் புதிய மாடல் அறிமுகம்!

கவாஸ்கி நிறுவனம் புதிய கவாசாகி Z900-ஐ இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் ஷோரூம் விலை ரூ.9.52 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கவாசகியில் புதிய அம்சங்களும... மேலும் பார்க்க