20-0: விம்பிள்டனில் சாதனை படைத்த ஜோகோவிச்!
புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகளில் முதல் சுற்றில் நோவக் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலெக்ஸாண்டர் முல்லருடன் மோதிய நோவக் ஜோகோவிச் முதல் செட்டில் அசத்திய ஜோகோவிச் 2-ஆவது செட்டில் டை பிரேக்கரில் இழந்தார்.
அடுத்தடுத்த செட்களில் மீண்ட ஜோகோவிச் எளிதாக வென்றார். இறுதியில் ஜோகோவிச் 6-1, 6-7 (7), 6-2, 6-2 என்ற செட்களில் வென்று அசத்தினார்.
3 மணி நேரம் 20 நிமிடம் சென்ற இந்தப் போட்டியில் ஜோகோவிச் முதல் செர்வில் 82 சதவிகிதமும் இரண்டாவது செர்வில் 63 சதவிகிதமும் வென்றார்.
ஜோகோவிச் முதல்முறையாக 2005-இல் விம்பிள்டனில் விளையாடினார்.
இதுவரை நடந்த விம்பிள்டன் போட்டிகளில் தான் விளையாடிய அனைத்து முதல் சுற்றுப் போட்டிகளிலும் (20-0) வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜோகோவிச் இரண்டாவது சுற்றில் டேனியல் எவன்ஸ் உடன் நாளை (ஜூலை 3) மோதுகிறார்.
Djokovic continued to display remarkable athleticism extend his perfect 20-0 record in opening matches at Wimbledon.