நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை க...
கிளப் உலகக் கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள்!
கிளப் உலகக் கோப்பை காலிறுதிக்கு 8 அணிகள் தேர்வாகியுள்ளன. இந்தப் போட்டிகள் வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுகள் முடிவுக்கு வந்தன.
இந்தச் சுற்றில் தேர்வாகி காலிறுதிக்கு பிஎஸ்ஜி, பயர்ன் மியூனிக், பால்மெய்ராஸ், செல்ஸி, ஃப்ளுமினென்ஸ், அல்-ஹிலால், ரியல் மாட்ரிட், டார்ட்மண்ட் ஆகிய அணிகள் தேர்வாகியுள்ளன.
கடைசியாக நடந்த போட்டிகளில் ரியல் மாட்ரிட், டார்ட்மண்ட் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.
இதில் ரியல் மாட்ரிட் ஜூவெந்தஸ்ஸ் அணியுடன் 1-0 எனவும் டார்ட்மண்ட் அணி மான்டேரியுடன் 2-1 எனவும் வென்றது.
காலிறுதியில் யார் யாருடன் மோதல்?
1. ஃப்ளுமினென்ஸ், அல்-ஹிலால் போட்டி - ஜூலை 5, நள்ளிரவு 12.30
2. பால்மெய்ராஸ் , செல்ஸி போட்டி - ஜூலை 5, காலை 6.30
3. பிஎஸ்ஜி, பயர்ன் மியூனிக் போட்டி - ஜூலை 5, இரவு 9.30
4. ரியல் மாட்ரிட், டார்ட்மண்ட் போட்டி - ஜூலை 6, நள்ளிரவு 1.30
Eight teams have been selected for the quarterfinals of the FIFA Club World Cup. This matches begin on July 5th.