ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்த நிலையில், ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா நான்காவது இடத்திலிருந்து ஒரு இடம் நகர்ந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஸ்மிருதி மந்தனா, சர்வதேச டி20 போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அந்த போட்டியில் அவர் 62 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடி அசத்தியதன் மூலம் பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி 794 ரேட்டிங் புள்ளிகளுடன் தரவரிசையில் முதலிடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 771 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஸ்மிருதி மந்தனா 771 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
Already No.1 in ICC Women's ODI Batter Rankings, India’s star opener now has her eyes on the T20I throne https://t.co/cIPtytfpgD
— ICC (@ICC) July 1, 2025
இந்திய அணியின் ஷஃபாலி வர்மாவும் பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் 14-வது இடத்திலிருந்து 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
காயம் காரணமாக இங்கிலாந்து எதிரான டி20 தொடரில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் இடம்பெறாத நிலையில், அணியை ஸ்மிருதி மந்தனா கேப்டனாக வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
India's vice-captain Smriti Mandhana has moved up to third place in the ICC T20 batting rankings.
இதையும் படிக்க: 2-வது ஒருநாள் போட்டியிலும் வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்; இங்கிலாந்துக்கு 291 ரன்கள் இலக்கு!