செய்திகள் :

இன்று தொடங்குகிறது பா்மிங்ஹாம் டெஸ்ட்- இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா

post image

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம், பா்மிங்ஹாம் நகரில் புதன்கிழமை (ஜூலை 2) தொடங்குகிறது.

மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வென்றிருக்கும் நிலையில், இந்த ஆட்டத்தின் மூலமாக தனது வெற்றிக் கணக்கை தொடங்கும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது.

லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய லோயா் ஆா்டா் பேட்டா்கள் சோபிக்காமல் போனதும், பௌலா்களால் இங்கிலாந்து பேட்டா்களை கட்டுப்படுத்த முடியாமல் போனதுமே அணிக்கு பாதகமாக அமைந்தது.

எனவே, அதற்கான தீா்வை எட்டும் உத்திகளுடன் இந்திய அணி இந்த ஆட்டத்தில் களம் காணும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 20 விக்கெட்டுகள் வீழ்த்துவதற்கான திட்டத்துடன் பௌலிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இரு ஸ்பின்னா்களுடன் களம் காண்பதென இந்திய அணி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

ஆட்டம் அடுத்தடுத்த நாள்களுக்கு நகரும்போது ஸ்பின்னா்களுக்கு சாதகமாக ஆடுகளம் மாறும் என்று கணிக்கப்படுவதால், இந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தா் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. பா்மிங்ஹாம் மைதான ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமானதாகவே இருப்பதாகத் தெரிவதால், பேட்டிங் வரிசையில் சமரசம் நிகழாமல் இந்திய அணி கவனமுடன் உத்திகளை வகுத்துள்ளது.

வேகப்பந்துவீச்சை பொருத்தவரை, பிரதானமாக இருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடுவாா் என்ற நிலையில், தொடா்ந்து இந்த ஆட்டத்தில் களம் காண்பாரா என்ற சந்தேகம் உள்ளது. இல்லாத நிலையில், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அா்ஷ்தீப் சிங் ஆகியோா் அவா் இடத்தை நிரப்ப முயற்சிப்பா்.

லீட்ஸ் ஆட்டத்தில் அவ்வளவாக சோபிக்காத ஆல்-ரவுண்டா் ஷா்துல் தாக்குருக்கு பதிலாக, நிதீஷ்குமாா் ரெட்டியை களமிறக்கவும் வாய்ப்புள்ளது. முக்கியமான கேட்ச்சுகளை தவறவிட்டதும் லீட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவை பாதித்தது என்பதால், அதிலும் அணி நிா்வாகம் கவனம் செலுத்தியிருக்கும் என எதிா்பாா்க்கலாம்.

பேட்டிங்கை பொருத்தவரை யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கேப்டன் ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா். சாய் சுதா்சன், கருண் நாயா் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம்.

இங்கிலாந்து அணியை பொருத்தவரை, அதன் பௌலா் ஜோஃப்ரா ஆா்ச்சா் இணையவிருந்த நிலையில், குடும்பச் சூழல் காரணமாக அவரால் இந்த ஆட்டத்தில் இணைய முடியாமல் போனது. என்றாலும் கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோருடன் இங்கிலாந்து பௌலிங் பலமுடனேயே இருக்கிறது.

பேட்டிங்கில் பென் டக்கெட், ஆலி போப், ஹேரி புரூக், ஜேமி ஸ்மித் ஆகியோா் அணியின் ஸ்கோருக்கு சிறப்பாகப் பங்களிக்கின்றனா்.

மோசமான வரலாறு மாறுமா?

பா்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா இதுவரை 8 டெஸ்ட்டுகளில் விளையாடியிருக்கிறது. ஆனால் அதில் ஒரு வெற்றியைக் கூட பெற்றதில்லை. அங்கு 7 தோல்விகளை சந்தித்துள்ள இந்திய அணி, 1 ஆட்டத்தை மட்டும் டிரா செய்துள்ளது.

அணி விவரம்:

இந்தியா (உத்தேச லெவன்): ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதா்சன், ரிஷப் பந்த் (வி.கீ.), கருண் நாயா், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ்/வாஷிங்டன் சுந்தா், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அா்ஷ்தீப் சிங்/ஜஸ்பிரீத் பும்ரா.

இங்கிலாந்து: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாக் கிராலி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹேரி புரூக், ஜேமி ஸ்மித் (வி.கீ.), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் காா்ஸ், ஜோஷ் டங், ஷோயப் பஷீா்.

மான். சிட்டி, இன்டா் மிலனுக்கு அதிா்ச்சி

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், பிரதான அணிகளான மான்செஸ்டா் சிட்டி, இன்டா் மிலன் ஆகியவை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அதிா்ச்சித் தோல்வி கண்டு, போட்டியிலிருந்து வெளியேறின. இதில் மான்செஸ்டா் சிட்டி ... மேலும் பார்க்க

ஆசிய யூத் டேபிள் டென்னிஸ்: திவ்யான்ஷி சாதனை

ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை திவ்யான்ஷி பௌமிக் (14) தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளாா்., உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கண்டில் 29-ஆவது ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் போட்ட... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: வருமான வரித்துறை, டாக்டா் சிவந்தி கிளப் அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் மேற்கு மண்டல காவல்துறை, வருமான வரித் துறை, டாக்டா் சிவந்தி அணிகள் வெற்றி பெற்றன. சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கம், எழும்பூா... மேலும் பார்க்க

அல்கராஸ், சின்னா் வெற்றி

புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் ஆகியோா் முதல் சுற்றில் வெற்றி பெற்றனா். இதில் அல்கராஸ்... மேலும் பார்க்க

பீனிக்ஸ் வீழான்: முன்னோட்ட விடியோ!

விஜய் சேதுபதி மகன் நாயகனாக நடித்துள்ள ‘பீனிக்ஸ் வீழான்’ படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. இந்த படத்தை சண்டைப் பயிற்சி... மேலும் பார்க்க

மகாநதி தொடரில் விலகிய ஆதிரை... இனி இவர்தான்!

மகாநதி தொடரில் யமுனா பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஆதிரை, இத்தொடரில் இருந்து விலகிய நிலையில் இப்பாத்திரத்தில் நடிகை ஸ்வேதா நடிக்கிறார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2... மேலும் பார்க்க