ஆசிய யூத் டேபிள் டென்னிஸ்: திவ்யான்ஷி சாதனை
ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை திவ்யான்ஷி பௌமிக் (14) தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளாா்.,
உஸ்பெகிஸ்தான் தலைநகா் தாஷ்கண்டில் 29-ஆவது ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் யு 15 மகளிா் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷி இறுதிச் சுற்றில் 4-2 என்ற கேம் கணக்கில் சீனாவின் ஸூ கியுஹியை வீழ்த்தி 36 ஆண்டுகளில் முதன்முறையாக தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற வரலாற்று சாதனையை படைத்தாா்.
இந்த வெற்றி மூலம் உலக யூத் சாம்பியன்ஷிப்புக்கும் தகுதி பெற்றுள்ளாா். இப்போட்டியில் ஒரு தங்கம், வெள்ளி, 2 வெண்கலத்துடன்இந்தியா நாடு திரும்பியுள்ளது.