செய்திகள் :

'மன்னிப்பு கேட்க சொன்னோம், ஆனால் மதிக்கவில்லை' - எம்எல்ஏ அருளை கட்சியில் இருந்து நீக்கிய அன்புமணி

post image

பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதன் தலைவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே  ஏற்பட்டுள்ளக் கருத்து வேறுபாடு காரணமாக கட்சி கிட்டதட்ட இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமதாஸின் ஆதரவாளராக இருக்கும் சேலம் எம்எல்ஏ அருளைக் கட்சியில் இருந்து நீக்குவதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்திருக்கிறார்.

அன்புமணி
அன்புமணி

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில்...

இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் திரு. இரா. அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

மதிக்கவில்லை

அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திரு. இரா. அருள் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.

பாமக எம்எல்ஏ அருள்
பாமக எம்எல்ஏ அருள்

அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30-இன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று (02.07.2025) புதன்கிழமை முதல் திரு. இரா. அருள் அவர்கள் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Vijay : 'கொடூரமா இருக்கு... இப்படி நடக்கவே கூடாது!' - அஜித் குமாரின் குடும்பத்திடம் விஜய் உருக்கம்!

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். அஜித்தின் தாயிடமும் சகோதர... மேலும் பார்க்க

TVK : 'சிவகங்கையில் விஜய்; அஜித் குமாரின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்!'

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார்.Vijayமுன்னதாக, உயிரிழந்த அ... மேலும் பார்க்க

விழுப்புரத்தின் `திமுக முகம்' - பதவியில் இல்லாவிட்டாலும் கோலோச்சும் பொன்முடி!

அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாலும், தற்போது வரை விழுப்புரத்தின் திமுக முகமாக பொன்முடியே அறியப்படுகிறார். கட்சிப் பதவியில் இல்லாவிட்டாலும் பொன்முடி தலைமையில், `ஓரணியில் தமிழ்... மேலும் பார்க்க

RBI: இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகின்றன தெரியுமா?!

சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டுகளை கையாண்டு தான் வருகிறோம். ரூ10, 100 ரூபாய் 500 ரூபாய் தற்போது நிறுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

டெல்லி: 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை - என்ன காரணம்?

டெல்லி அரசு சமீபத்தில் பழைய வாகனங்கள் மீது எடுத்த நடவடிக்கை, தலைநகர் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மாநில அரசின் புதிய கொள்கைபடி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க