நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை க...
"அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது" - திருமாவளவன்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில், அஜித்குமார் மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட மாநில அரசு, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தனிப்படைக் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்துப் பேசியிருக்கும் விசிக திருமாவளவன், "அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. காவல்துறையில் முரட்டுத்தனமான போக்கு நீடிப்பது வேதனை அளிக்கிறது. அரசு கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.