நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை க...
``என்னால் கூட ஆட்சியரிடம் பேச முடியவில்லை; சாமானிய மக்களின் நிலை..'' - MLA ஜெயசீலன் சொல்வதென்ன?
திஷா கமிட்டி எனப்படும் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் இன்று காலை தொடங்கியது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூடலூர் சட்டமன்ற (தனி) தொகுதி எம்எல்ஏ (அதிமுக) ஜெயசீலன் பங்கேற்றுள்ளார்.

கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எம்எல்ஏ ஜெயசீலன், "நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் மனித -வனவிங்கு பிரச்னைகள் முதல் பழங்குடி மற்றும் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளுக்கான பிரச்னைகள் வரை நூற்றுக்கணக்கான பிரச்னைகள் இருக்கிறது. பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்னைகள் அதிக அளவில் உள்ளன.
மக்களின் பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்வதற்காக மாவட்ட ஆட்சியரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால், அவர் எந்த அழைப்பையும் ஏற்பதே கிடையாது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் 12 முறை செல்போன் மூலம் அழைத்துள்ளேன். எந்த அழைப்பையும் அவர் ஏற்கவில்லை.

பிஸியாக இருப்பார் என ஓய்வு நேரத்தையும் கேட்டறிந்து அழைத்தேன். அப்போதும் ஏற்கவில்லை. என்பதால், நான் என்னுடைய தனிப்பட்ட தேவைக்காகவோ தனிப்பட்ட பிரச்னைக்காகவோ அழைக்கவில்லை. இரண்டு லட்சம் மக்களின் பிரதிநிதி என்கிற முறையிலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் அழைக்கிறேன். ஆனால், அலட்சியமாக இருந்து வருகிறார். ஒரு எம்.எல்.ஏ- வாக இருக்கும் என்னால் கூட மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள முடியவில்லையென்றால் சாமானிய மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள் " என கொந்தளித்தார்.