செய்திகள் :

திருமணம் செய்துகொள்வதாகச் சிறுமி பாலியல் வன்கொடுமை: தில்லியில் அதிர்ச்சி!

post image

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி அமிலம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் ரெஹான். வசந்த் குஞ்ச் பகுதியில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின்பு திருமணம் செய்துகொள்ளப் பின்வாங்கியுள்ளார். சிறுமியுடன் இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து மன உளைச்சலுக்குள்ளான சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, ஆசிட் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஜூன் 18ல் இந்த சம்பவம் நடைபெற்றது. சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஜூன் 20 ஆம் தேதி உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ரெஹான் திருமணம் செய்துகொள்வதாக தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், புகைப்படங்களைக் காட்டி மிரட்டியதாகவும் குற்றம் சாட்டினார். இதையடுத்து சிறுமியிடம் விசாரணை நடத்த போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்தனர். மேலும் தனது மகளின் மொபைல் போனையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும், அதில் குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் குரல் பதிவுகள் இருந்துள்ளது.

வசந்த் விஹாரின் துணைப்பிரிவு நீதிபதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது, மேலும் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ஒரு தாசில்தார் நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, ஜூன் 25 அன்று வசந்த் குஞ்ச் (தெற்கு) காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ரங்புரி பஹாரியில் உள்ள சங்கர் முகாமில் வசிக்கும் ரெஹான் கைது செய்யப்பட்டார். 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், விமான நிலையத்தில் சுமை ஏற்றும் பணியாளராக பணியாற்றியுள்ளார். தற்போது அவர் வேலையில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் விசாரணை நடந்து வருவதாக அவர் கூறினார்.

Summary

A girl attempted suicide by drinking acid in southwest Delhi's Vasant Kunj area after she was allegedly sexually assaulted by a man she was in a relationship with, police said on Wednesday.

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்... மேலும் பார்க்க

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, இத்தகைய தேவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். 1955-... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்டது முதல் குழு

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஜம்மு முகாமில் இருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு 5,892 பேருடன் முதலா... மேலும் பார்க்க