பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு மறுவாய்ப்பு? ஆட்சிமன்றக் குழு கூடுகிறது
பீனிக்ஸ் வீழான்: முன்னோட்ட விடியோ!
விஜய் சேதுபதி மகன் நாயகனாக நடித்துள்ள ‘பீனிக்ஸ் வீழான்’ படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’. இந்த படத்தை சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ளார்.
இந்தப் படம் அனல் அரசின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஆக்ஷன் பின்னணியில் உருவாகிறது.
இந்தப்படம் வரும் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.
சமீபத்தில் ‘பீனிக்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகி கவனம்பெற்ற நிலையில், தற்போது 2 நிமிட முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
The trailer of the film 'Phoenix Veezhan' starring Vijay Sethupathi's son has been released.