மகாநதி தொடரில் விலகிய ஆதிரை... இனி இவர்தான்!
மகாநதி தொடரில் யமுனா பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஆதிரை, இத்தொடரில் இருந்து விலகிய நிலையில் இப்பாத்திரத்தில் நடிகை ஸ்வேதா நடிக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பிரவீன் பென்னட் இயக்கி வரும் இத்தொடரில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன், ஸ்வேதா , கம்ருதீன், தரணி, பேபி காவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். டிஆர்பியிலும் இத்தொடர் முன்னணியில் உள்ளது.
மகாநதி தொடரில் இருந்து நடிகை ஆதிரை விலகியுள்ளார். இது தொடர்பாக மகாநதி தொடரின் இயக்குநர் பிரவீன் பென்னட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், “ஆள் மாற்றப்படுகிறது, என்ன பன்றது, என்னால் தவிர்க்க முடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் இவர் இயக்கும் நாயகிகள் தனிப்பட்ட காரணங்களால், தொடரிலிருந்து விலகுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
முன்னதாக, ராஜா ராணி - 2 தொடரில் ஆல்யா மானசா, பாரதி கண்ணம்மா தொடரில் ரோஷினி ஆகியோர் விலகிய நிலையில், தற்போது நடிகை ஆதிரை விலகியுள்ளார்.
இந்த நிலையில், மகாநதி தொடரில் யமுனா பாத்திரத்தில் நடிகை ஸ்வேதா நடிக்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
Actress Adhirai, who played the role of Yamuna in the Mahanadi series, has opted out of the series and actress Swetha will be playing the role.
இதையும் படிக்க: விமான நிலையத்தில் பிக் பாஸ் காதலர்களை சந்தித்த ஃபரீனா!