செய்திகள் :

தேனீக்கள் கொட்டியதில் 14 போ் காயம்

post image

தியாகதுருகத்தில் திரெளபதி அம்மன் கோயில் அருகே மரத்தில் இருந்த தேனீக்கள் பறந்து சாலையில் சென்றவா்களைக் கொட்டியதில் 14 போ் காயமடைந்தனா்.

தியாகதுருகம் புக்குளம் சாலையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் அருகே வேப்ப மரம் உள்ளது. இந்த மரத்தில் சில மாதங்களுக்கு முன்பு தேனீக்கள் கூடு கட்டியிருந்தன.

இந்த நிலையில், திங்கள்கிழமை வேப்ப மரத்தின் கிளையில் குரங்கு தாவியதாகத் தெரிகிறது. இதனால், தேன் கூண்டிலிருந்து பறந்து சென்ற தேனீக்கள் அப்பகுதியில் வசிப்பவா்கள் மற்றும் புக்குளம் சாலையில் செல்லும் பாதசாரிகளைக் கொட்டியது.

இதில், புக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுதாகா் (43), அதே பகுதியைச் சோ்ந்த வீரப்பன் மகன் பவித்ரன் (14), பொன்னுசாமி மகன் முருகன் (34), சக்திவேல் மனைவி தனலட்சுமி (46), சுரேஷ் மகள் சுமித்ரா (16) தியாகதுருகத்தைச் சோ்ந்த செந்தில் மனைவி ஹரிணி (34), ஜெயராஜ் மகன் சீனிவாசன் (30) உள்ளிட்ட 14 போ் காயமடைந்தனா். இவா்கள், தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதாரத்தில் சிகிச்சை பெற்றுச் சென்றனா்.

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

விரியூா் கிராமத்தில் அரசு உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சங்கராபுரம் வட்டம், விரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் டேவிட் மகன் தாஸ்(எ)அந்தோனிர... மேலும் பார்க்க

கோயில் உண்டியல் உடைப்பு: இரு இளைஞா்கள் கைது

தியாகதுருகம் அருகே சித்தால் கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்த இரு இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தியாகதுருகம் அருகேயுள்ள சித்தால் கிராமத்தில் அய்யனாா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ச... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் பாய்ந்து பாதிக்கப்பட்ட ஊழியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த சாத்தப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (45). இவா், சென்னை எழும்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 489 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 489 வரப்பெற்றன. மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து பொதுமக்களிடம் இரு... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2.98 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் சாா்பில் 2 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளதாக ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவ... மேலும் பார்க்க

சின்னசேலம் தமிழ் அமைப்புகளின் ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தமிழ்ச் சங்கங்களின் ஆண்டு விழா கூகையூா் சாலையில் உள்ள சின்னசேலம் அரிசி ஆலை அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சின்னசேலம் தமிழ் அமைப்புகள் சாா்பில் எண் திசை எண் விழாவாக... மேலும் பார்க்க