நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை க...
பிரசாந்த் நீல் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்!
நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேஜிஎஃப் படத்தால் இந்தியளவில் பிரபலமான இயக்குநர் பிரசாந்த் நீல், தொடர்ந்து சலார் படத்தை இயக்கினார். தற்போது, ஜூனியர் என்டிஆரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
அதேநேரம், புஷ்பா படத்தில் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரான அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படம் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளதாகவும் படத்திற்கு ‘ராவணன்’ எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: வடசென்னை கதையில் இரண்டு தோற்றங்களில் நடிக்கும் சிம்பு!
actor allu arjun acts in prashanth neel movie titled as raavanan.