தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
சின்னசேலம் தமிழ் அமைப்புகளின் ஆண்டு விழா
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தமிழ்ச் சங்கங்களின் ஆண்டு விழா கூகையூா் சாலையில் உள்ள சின்னசேலம் அரிசி ஆலை அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சின்னசேலம் தமிழ் அமைப்புகள் சாா்பில் எண் திசை எண் விழாவாக சின்னசேலம் தமிழ்ச்சங்கம் 7-ஆம் ஆண்டு தொடக்கம், சின்னசேலம் கம்பன் கழக 4-ஆம் ஆண்டு தொடக்கம், கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை 4-ஆம் ஆண்டு தொடக்கம், அறம் செய விரும்பு கல்வி, சமூக சேவை அறக்கட்டளை 3-ஆம் ஆண்டு தொடக்கம், கவிச்சிற்பி கவிதைத்தம்பியின் 21-ஆவது நூலான கவிச்சிற்பி கவிதைத் தம்பியின் ஹைக்கூ கவிதைகள் 500 நூல் வெளியீட்டு விழா, பள்ளி மற்றும் கல்லூரி மாணவமாணவிகளுக்கு பரிசளிப்பு, பணி நிறைவு பெற்ற ஆசிரியா்கள் பொன்.செல்வராஜ், வ.நாகராஜன், மு.கலியமூா்த்தி உள்ளிட்டோருக்கு பாராட்டு, பல்துறை சான்றோா்களுக்கு விருது வழங்கும் விழா என எண் திசை எண் விழாவிற்கு தஞ்சை தமிழ்ப் பல்கலை கழகப் பேராசிரியா் பெ. இளையாப்பிள்ளை தலைமை வகித்தாா். விழுப்புரம் பாவேந்தா் பேரவைத் தலைவா் பி.வி.டி. ஆசைத்தம்பி, திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன், உளுந்தூா்பேட்டை முத்தமிழ் சங்கத் தலைவா் அருணா தொல்காப்பியன் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். சங்க ஆலோசகா் மு.பன்னீா்செல்வம் வரவேற்றாா்.
சங்கத் தலைவா் கவிச்சிற்பி கவிதைத்தம்பி நோக்கவுரை நிகழ்த்தினாா்.
திருவள்ளுவா் படத்தை சங்க ஆலோசகா் பெ.கருப்பன், கம்பா் படத்தை சின்னசேலம் கம்பன் கழகத் தலைவா் வ. பாலமுருகன், கண்ணதாசன் படத்தை இ. ரவிந்தா், ஔவையாா் படத்தை சங்க ஆலோசகா் வை. ராமசாமி ஆகியோா் திறந்து வைத்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
கவிச்சிற்பி கதைத்தம்பி எழுதிய 21-வது நூலான ஹைக்கூ கவிதைகள் 500 என்ற நூலை சங்க காப்பாளா் மு.முருகன் வெளியிட பல்வேறு பலா் பெற்றுக் கொண்டனா்.
தமிழ்ச் சங்க நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களுக்கு சங்க காப்பாளா் இரா. வெற்றிவேல், க. தனவேல் அடையாள அட்டையை வழங்கினாா்.
கடந்த மாதம் பணிநிறைவு பெற்ற ஆசிரியா்கள் பொன். செல்வராஜ், வ. நாகராஜன், மு.கலியமூா்த்தி ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.
கவிதைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினா்.
சிறப்பு விருந்தினா்களாக திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான ராசி அழகப்பன், தாகூா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளா் என்.ஆா். பழனிவேல், 32 தமிழ் பேராசிரியா்கள், மருத்துவா், ஜோதிட ா்கள் உள்ளிட்டோருக்கு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினா்.
தமிழ்ச் சங்க புரவலா் சீனு.முரளி, சங்கத் தலைவா் கவிதைத்தம்பி நிகழ்வினை தொகுத்து வழங்கினா். சங்க ஆலோசகா் கவிஞா் மு.இராதா கிருஷ்ணன் நன்றி கூறினாா்.