செய்திகள் :

மது போதையில் வேட்டை; தவறிய இலக்கு — கோவை பழங்குடி இளைஞர் சுட்டு கொலை; 2 பேர் கைது

post image

கோவை மாவட்டம், காரமடை, அத்திக்கடவு அருகே உள்ள சுரண்டை என்கிற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சித். இவர் தன் கிராமத்தைச் சேர்ந்த பாப்பையன் மற்றும் முருகேஷ் ஆகியோருடன் இரவு நேரத்தில் காட்டுக்கு வேட்டையாட சென்றுள்ளார்.

சஞ்சித்

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கையில் ஒரு நாட்டு துப்பாக்கி எடுத்து சென்றுள்ளனர். பாப்பையா கையில் துப்பாக்கி இருந்துள்ளது. அவர் அங்குள்ள ஒரு இலக்கை நோக்கி சுட்டுள்ளார்.

அப்போது சஞ்சித் திடீரென குறுக்கே வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் உடலில் அடுத்தடுத்து நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளது. சஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக முருகேஷ் சஞ்சிவீன் குடும்பத்துக்கு அழைத்து தகவல் சொல்லியுள்ளார்.

பாப்பையா
முருகேஷ்

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சஞ்சித்தின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். பாப்பையா மற்றும் முருகேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.

காவல்துறை சிறப்புப் படை அமைத்து அவர்களை தேடி வந்த நிலையில், நேற்று பாப்பையா மற்றும் முருகேஷ் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் போது அவர்கள் 3 பேருமே மது போதையில் இருந்தது தெரிய வந்தது.

கைது
கைது

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வனத்துறையினர் வனப்பகுதி மற்றும் அதன் எல்லைகளில் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அஜித்குமார் லாக்கப் மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் கொலை வழக்கில் கைது; அரசு நடவடிக்கை

'போலீசிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் உயிரிழந்தார்' என்று, முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்த நிலையில் தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ... மேலும் பார்க்க

சென்னை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாரா போலீஸ் எஸ்.ஐ? - தந்தை பகீர் குற்றச்சாட்டு!

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். கட... மேலும் பார்க்க

வரதட்சணை: 'என் புள்ளைக்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்கக் கூடாது' - கண்ணீர் விட்டு கதறும் தந்தை

திருப்பூர் அருகே, `கணவர் மற்றும் மாமனார், மாமியாரின் வரதட்சணை கொடுமைத் தாங்க முடியவில்லை' எனக் கூறி திருமணமான இரண்டே மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்ப... மேலும் பார்க்க

Bengaluru: லிவ் இன் உறவில் வாழ்ந்த பெண் கொலை; சாக்கு மூட்டையில் கட்டி, குப்பை லாரியில் போட்ட இளைஞர்

பெங்களூரு மாநகராட்சி குப்பை லாரியில் எடுத்து வரப்பட்ட குப்பையில் சாக்குமூட்டை ஒன்று இருந்தது. அதனை துப்புரவு தொழிலாளர்கள் திறந்து பார்த்தபோது உள்ளே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கை, கால்கள் கட... மேலும் பார்க்க

”தாய் உடலை அடக்கம் செய்ய முடியாத வறுமை”- மனநலம் பாதிக்கப்பட்ட மகன்கள் செய்த நெஞ்சை உலுக்கும் செயல்!

நாகப்பட்டினம் அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் காந்தி மகான் கடற்கரை சாலையில் உள்ள தைல மரகாட்டில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் கடந்த 27ம் தேதி சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அந்த மூட்டையிலிருந்து து... மேலும் பார்க்க

சிவகங்கை: 'என் அண்ணன் முன்னாடி என்னையும் அரைமணிநேரம் அடிச்சாங்க' - உயிரிழந்த இளைஞரின் சகோதரர்

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் மரணமடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக... மேலும் பார்க்க