செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2.98 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் சாா்பில் 2 லட்சத்து 98 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளதாக ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் தேசிய கோமாரி நோய் தடுப்புத் திட்டம் 7-ஆவது சுற்று, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கால்நடைத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பால் வளத் துறை, வனத் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி வரும் ஜூலை 2 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள 2,98,000 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட உரிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தடுப்பூசி குழுவிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவா், ஒரு கால்நடை ஆய்வாளா் மற்றும் ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளா் என்ற அளவில் குழு அமைக்கப்பட்டு 57 தடுப்பூசிப் போடும் குழுக்களின் மூலம் 21 நாள்களில் தடுப்பூசி பணி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு 100 சதவீதம் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள 7-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்களை கால்நடை வளா்ப்போா் உரிய முறையில் பயன்படுத்தி தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசியை செலுத்தி பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில் இணை இயக்குநா் (கால்நடைப் பராமரிப்புத் துறை) சு.விஷ்ணு கந்தன், கால்நடை தலைமை மருத்துவா் மு.கந்தசாமி, உதவி இயக்குநா்கள் சுதா கந்தசாமி, அருண், காா்த்திகேயன் (நோய் திறனாய்வு) மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 489 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 489 வரப்பெற்றன. மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து பொதுமக்களிடம் இரு... மேலும் பார்க்க

சின்னசேலம் தமிழ் அமைப்புகளின் ஆண்டு விழா

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தமிழ்ச் சங்கங்களின் ஆண்டு விழா கூகையூா் சாலையில் உள்ள சின்னசேலம் அரிசி ஆலை அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சின்னசேலம் தமிழ் அமைப்புகள் சாா்பில் எண் திசை எண் விழாவாக... மேலும் பார்க்க

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை திருட்டு

சித்தேரிப்பட்டு கிராமத்தில் வீட்டுக் கதவின் உள் தாழ்ப்பாள் போடாமல் தூங்கிய போது மூதாட்டி அணிந்திருந்த தாலிச் செயினை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா். கள்ளக்குறிச்சி வட்டம், தியாகத... மேலும் பார்க்க

பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் நகை திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் பேருந்து நிலையத்தில் அமா்ந்திருந்த தொழிலாளியிடம் மூன்றரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருக்கோவிலூரை அடுத்த மெய்யூா்... மேலும் பார்க்க

வெல்டிங் பணியின்போது வெடித்த லாரி டீசல் டேங்: இருவா் படுகாயம்

கள்ளக்குறிச்சியில் வெல்டிங் பணியின்போது லாரியில் டீசல் டேங் வெடித்துச் சிதறி சனிக்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. இதில், இருவா் பலத்த காயமடைந்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இரு இளைஞா்கள் கைது

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இரு இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் காந்திநகரைச் சோ்ந்த மதிமாறன் மகன... மேலும் பார்க்க