செய்திகள் :

தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!

post image

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி மருந்து ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் திங்கள்கிழமை உலை வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் ஆலையில் 90-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

விபத்து குறித்து தவலறிந்ததும் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் தொடங்கினர். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, தேசிய மற்றும் மாநில மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் இணைந்தனர்.

சம்பவ இடத்திலிருந்து 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனர். இதில், 2 போ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தடைசெய்யப்பட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 8 கிளர்ச்சியார்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள... மேலும் பார்க்க

குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு!

ஒடிசாவில் நடந்த குறைதீர் கூட்டத்தில், மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நேற்று(ஜூன் 30) குறைதீர் கூட்டத்தின்போது, திடீரென அலுவல... மேலும் பார்க்க

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூலை 1) ரூ. 58.50 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்துக்கு எதிரான லலித் மோடியின் மனு தள்ளுபடி

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (எஃப்இஎம்ஏ) மீறியதற்காக அமலாக்கத் துறை சாா்பில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை இந்திய கிரிக்கெட் சங்க வாரியம் (பிசிசிஐ) செலுத்த உத்தரவிடக் கோரி ... மேலும் பார்க்க