செய்திகள் :

வாழப்பாடி அருகே விவசாயி கொலை? மைத்துனர் உள்பட இருவரிடம் போலீஸ் விசாரணை!

post image

வாழப்பாடி அருகே விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் இருவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 4 மாதங்களுக்கு முன் மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவரே தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது, 4 மாதங்களுக்கு பிறகு தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, இருவரையும் பிடித்து வாழப்பாடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனியன் (46). இவருக்கு செல்வி (37) என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் வீட்டில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற விவசாயி முனியன், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தும் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், இவரது மனைவி, மகன்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்த நிலையில், காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு இவரது மனைவி செல்வி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இவரது புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், முனியனின் சகோதரிகள் ராணி, நீலா ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்ட அதேப் பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான அவரின் மைத்துனர் வெங்கடாஜலம், தனது நண்பர் சேகர் என்பவருடன் சேர்ந்து முனியனை அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து சந்தேகத்திற்குரிய இருவரையும் பிடித்து வாழப்பாடி காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலையுண்ட விவசாயி முனியன், தனது உடன்பிறந்த சகோதரியான நீலாவுடன் நெருங்கி பழகி வந்ததால், இருவருக்கும் இடையே தகாத உறவு இருக்கலாமென சந்தேகம் அடைந்த கட்டட தொழிலாளி வெங்கடாஜலம் தனது நண்பர் சேகருடன் சேர்ந்து முனியனை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கொலை செய்த தடயங்களை மறைக்க, முனியனின் உடலை எடுத்துச் சென்று எரித்திருக்கலாம் அல்லது எங்கேயாவது புதைத்து வைத்திருக்கலாம் என்பதால் உடலைத் தேடும் பணியில் காவல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொலையுண்ட முனியனின் இருசக்கர வாகனம் வாகனத்தை துக்கியாம்பாளையம் கமலாலயம் அருகிலுள்ள பயன்படாத விவசாயி கிணற்றில் கிடப்பது போலீசாருக்கு தெரிவந்துள்ளது. விவசாயி முனியனை எப்போது? எங்கே? எப்படி கொன்றார்கள்? எங்கு எடுத்துச் சென்று எரித்தார்களா? அல்லது புதைத்து வைத்துள்ளனரா? என்பது குறித்து, வாழப்பாடி போலீஸ் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், காவல் ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் கிடக்கும் இருசக்கர வாகனத்தை தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். விவசாயி முனியனை உறவினர்களே சேர்ந்து கொலை செய்த விவகாரம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

It has now been revealed after 4 months that a farmer who went missing near Vazhapadi in Salem district four months ago was murdered by his sister's husband along with his friend.

இதையும் படிக்க... குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: நிவாரணம் அறிவிப்பு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விர... மேலும் பார்க்க

இளைஞர் மரண வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ரகுபதி

தமிழக வெற்றிக் கழகத்தை நாங்கள் ஒரு கட்சியாகவே எடுத்துக்கொள்ளவில்லை எனவும் திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த... மேலும் பார்க்க

காவல் துறை அத்துமீறல்..! சிவகங்கை இளைஞர் அஜித்தை தாக்கும் விடியோ வெளியீடு!

சிவகங்கையில் காவல் துறையினர் தாக்கியதில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாரை போலீஸார் கொடூரமாகத் தாக்கும் விடியோ வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை கா... மேலும் பார்க்க

விசாரணை என்ற பெயரில் கொலை! அடிப்பதற்காகவா காவல்துறை? - நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி

திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில்... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விச... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

சிவகங்கை காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விச... மேலும் பார்க்க