தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்தியது டிஜிட்டல் இந்தியா திட்டம்: அமித் ஷா
140 கோடி இந்தியர்களின் முயற்சியில் டிஜிட்டல் இந்தியா முன்னேற்றம்: பிரதமர்
டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இந்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைத்தளமான லிங்கட்இனில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அவர் வெளியிட்ட பதிவில்,
டிஜிட்டல் இந்தியா தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து, இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று கூறினார்.
இந்தியர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான திறனைச் சந்தேகிப்பதில் பல ஆண்டுகள் கழிந்த நிலையில், தனது அரசு இந்த அணுகுமுறையை மாற்றியது. பத்தாண்டுகளுக்கு முன்பு நமது நாட்டை டிஜிட்டல் ரீதியாக அதிகாரம் பெற்ற மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய சமூகமாக மாற்றுவதற்கான முயற்சியாக டிஜிட்டல் இந்தியா தொடங்கியது.
இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் சுமார் 25 கோடி இணைய இணைப்புகள் இருந்ததாகவும், அந்த எண்ணிக்கை இன்று 97 கோடிக்கும் அதிகமாக வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் 5G வெளியீடு உலகின் வேகமான ஒன்றாகும், இரண்டு ஆண்டுகளில் 4.81 லட்சம் அடிப்படை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதிவேக இணையமானது தற்போது கால்வான், சியாச்சின் மற்றும் லடாக் உள்ளிட்ட நகர்ப்புற மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளையும் அடைகிறது.
2014 தான் ஆட்சிக்கு வந்தபோது இணையசேவை குறைவாகவும், டிஜிட்டல் கல்வியவு, அரசு சேவைகளுக்கான ஆன்லைன் அணுகல் குறைவாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
இந்தியா போன்ற பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு உண்மையிலேயே டிஜிட்டல் மயமாக்க முடியுமா என்று பலர் சந்தேகித்தனர். ஆனால் 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியால் இயக்கப்படும் டிஜிட்டல் கட்டணங்களில் இந்தியா பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளும் பயணடைந்துள்ளன என்று அவர் கூறினார்.
Summary
Today marks 10 years since the launch of the Digital India project.