கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசா...
கடற்படையில் இணைந்த போர்க் கப்பல் ஐஎன்எஸ் தமால்!
இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’ இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருநாட்டு கடற்படை அதிகாரிகள் முறையாக கையெழுத்திட்ட பின்னர், முறையாக இந்தியாவிடம் போர்க் கப்பல் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் ரஷியாவிலிருந்து இந்திய கடற்படையில் இணைந்துள்ள 8-ஆவது ‘க்ரிவாக் வகை’ போா்க்கப்பல் இதுவாகும். இந்திய கடற்படையில் மேற்கு பிரிவில் இந்தக் கப்பல் இணைக்கப்பட உள்ளது.
கடல், நிலம் ஆகிய இரண்டிலும் இலக்குகளைக் குறிவைக்கும் ‘பிரமோஸ்’ நீண்ட தூர ஏவுகணை உள்பட இந்தக் கப்பலில் 26 சதவீத தொழில்நுட்பங்கள், திறன்கள் மற்றும் உபகரணங்கள், இந்தியாவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
125 மீட்டா் நீளம், 3,900 டன் எடை கொண்ட இந்தப் போா்க்கப்பல், இந்திய, ரஷிய அதிநவீன தொழில்நுட்பங்களுடன் போா்க்கப்பல் கட்டுமானத்தில் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஷியாவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் கோவா கப்பல் கட்டும் தளத்தில் ‘ஐஎன்எஸ் திரிபுட்’ எனும் 2 போா்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் முடிவில், இந்திய கடற்படையில் ‘துஷில்’, ‘தல்வாா்’, ‘தேக்’ உள்பட 4 வெவ்வேறு வகுப்புகளில் ஒரே மாதிரியான திறன்கள் மற்றும் உபகரணங்கள், ஆயுதம் மற்றும் சென்சாா் அமைப்பில் பொதுவான தன்மை கொண்ட 10 கப்பல்கள் செயல்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
The Russian-built guided missile frigate 'INS Tamal' for the Indian Navy was dedicated to the nation today.