செய்திகள் :

புதிய முயற்சி: ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் மகாநதி தொடர்!

post image

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடர், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் (ஜூலை 6) ஒளிபரப்பாகவுள்ளது.

பிரவீன் பென்னட் இயக்கி வரும் தொடர் மகாநதி. இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.

இத்தொடரில் நடிக்கும் விஜய் - காவேரிக்கு(லஷ்மிபிரியா - சுவாமிநாதன்) இணைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். டிஆர்பியிலும் இத்தொடர் முன்னணியில் உள்ளது. இத்தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன், ஸ்வேத , கும்ருதீன், தாரணி, பேபி காவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இத்தொடரில் அடுத்தடுத்து நடக்கவுள்ள சுவாரசிய சம்பவங்களை மையப்படுத்தி சிறப்புக் காட்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 6) மாலை 5 முதல் 6.30 வரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

இந்த சிறப்புக் காட்சி ஒளிபரப்பானது இத்தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு விருந்துதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் அய்யனார் துணை தொடரின் சிறப்புக் காட்சி ஒளிபரப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தையடுத்து, இந்த வாரம் மகாநதி தொடரை ஒளிபரப்பு செய்ய சேனல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

The Mahanadi series, which airs on Vijay TV, will also be aired on Sunday this week (July 6).

இதையும் படிக்க: மகாநதி தொடரிலிருந்து முக்கிய பிரபலம் விலகல்!

கதாநாயகியாகும் மோகன்லால் மகள்! இயக்குநர் யார் தெரியுமா?

நடிகர் மோகன்லாலின் மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். இந்தியளவில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவின் வணிகத்தை உலகளவில் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவராகக்... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் பிக் பாஸ் காதலர்களை சந்தித்த ஃபரீனா!

பிக் பாஸ் காதலர்களான செளந்தர்யா நஞ்சுண்டான், விஷ்ணு விஜய் ஆகியோரை நடிகை ஃபரீனா சந்தித்துப் பேசியுள்ளார். விமான நிலையத்தில் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் ச... மேலும் பார்க்க

தம்பி அறிமுகமாகும் படத்தில் நடித்த விஷ்ணு விஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் தன் தம்பி நாயகனாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார். ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்... மேலும் பார்க்க

சீரியலுக்காக கட்டடத் தொழிலாளியாக மாறிய நடிகை!

தனம் தொடருக்காக சின்ன திரை நடிகை சத்யா தேவராஜன், கட்டடத் தொழிலாளியாகவே மாறியுளார். படப்பிடிப்பு தளத்தில் இதற்காகத் தயாராகும் விடியோவை சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலர் பகிர்ந்... மேலும் பார்க்க

இதயம் தொடரில் இருந்து விலகிய பாரதி கண்ணம்மா நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் இருந்து நடிகை ஃபரீனா ஆசாத் விலகுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு பதிலாக நடிகை சுபலட்சுமி ரங்கன் நடிக்கவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள்... மேலும் பார்க்க

கூலி இசைவெளியீட்டு விழா எப்போது?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த்... மேலும் பார்க்க