செய்திகள் :

126 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை..! 820 ரன்கள் குவித்து சாதனை!

post image

கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணி 820 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட் போட்டியான கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணியும் துர்ஹம் அணியும் கடந்த ஜூன் 29 முதல் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் போட்டிங் செய்த சர்ரே அணி 820/9 ரன்கள் குவித்தது. இந்த அணியின் தொடக்க வீரர் டோம் சிப்லி 305 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்த அணியில் சாம் கர்ரண், டான் லாரன்ஸ், வில் ஜாக்ஸ் ஆகிய மூவரும் அவர்கள் பங்கிற்கு சதம் அடித்து அசத்தினார்கள். சர்ரே அணி முதல் இன்னிக்ஸில் 161.3 ஓவர்களில் 820/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

அடுத்ததாக துர்ஹம் அணி 33 ஓவர்களில் 62/1 ரன்கள் எடுத்துள்ளது.

126 ஆண்டு வரலாற்றில் சர்ரே அணியின் அதிகபட்ச இலக்கு (820) இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக 811 ரன்கள் எடுத்திருந்தது.

கவுண்டி கிரிக்கெட்டில் யார்க்‌ஷ்ரி அணி 1986ஆம் ஆண்டு 887 ரன்கள் அடித்ததுதான் இதுவரை முறியடிக்கப்படாமல் முதலிடத்தில் இருக்கிறது. சர்ரே அணி இந்த வரிசையில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

வழக்கமாக விளையாடும் டியூக் பந்து இல்லாமல் இந்தமுறை கூக்கபுரா பந்தில் விளையாடினார்கள். ஏனெனில் அது ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது உதவும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

லண்டல் வெய்யிலில் இந்தப் பந்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை அளித்துவிட்டது.

A remarkable feat at the Kia Oval! 820/9 is our new highest team total in a first-class fixture. The previous best was 811 against Somerset, at the same ground, 126 years ago.

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை 328 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் ... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு விற்கப்படுகிறாரா சஞ்சு சாம்சன்?

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள வீரர்கள் சிலர் விற்கப்பட்டு, புதிய வீரர்கள் வாங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இளம்... மேலும் பார்க்க

பும்ரா இல்லாதது இந்தியாவின் பிரச்னை; இங்கிலாந்தின் பிரச்னையல்ல: பென் ஸ்டோக்ஸ்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை ... மேலும் பார்க்க

பாரம்பரியமான பொறுப்பை அலெக்ஸ் கேரியிடம் ஒப்படைத்த லயன்..! ஓய்வு பெறுகிறாரா?

ஆஸி. வீரர் நாதன் லயன் தனது அணிக்காக பாட்டு பாடும் ’ஆஸி. சாங் மாஸ்டர்’ எனும் பொறுப்பை அலெக்ஸ் கேரியிடம் கைமாற்றியுள்ளார். ஆஸி. அணி டெஸ்ட் போட்டிகளில் வெல்லும்போதெல்லாம் ஒரு கிராமியப் பாடலைப் பாடுவது வழ... மேலும் பார்க்க

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவ... மேலும் பார்க்க

இந்திய அணி விளையாடாத டெஸ்ட் போட்டி: இந்திய ரசிகர்களால் நிகழ்த்தப்பட்ட சாதனை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. லண்டனில் கடந்த ஜூன் 11-இல் தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வென... மேலும் பார்க்க