கொல்கத்தா மாணவி பாலியல் வன்கொடுமை: கைதான 3 மாணவர்களையும் ஜூலை 8 வரை காவலில் விசா...
பாரம்பரியமான பொறுப்பை அலெக்ஸ் கேரியிடம் ஒப்படைத்த லயன்..! ஓய்வு பெறுகிறாரா?
ஆஸி. வீரர் நாதன் லயன் தனது அணிக்காக பாட்டு பாடும் ’ஆஸி. சாங் மாஸ்டர்’ எனும் பொறுப்பை அலெக்ஸ் கேரியிடம் கைமாற்றியுள்ளார்.
ஆஸி. அணி டெஸ்ட் போட்டிகளில் வெல்லும்போதெல்லாம் ஒரு கிராமியப் பாடலைப் பாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆஸ்திரேலிய அணி 1974-இல் இங்கிலாந்தை வீழ்த்தியபோது ரோட் மார்ஷ் இந்தப் பாடலைப் பாடினார். அந்தப் பாடல் ஐயான் சேப்பலிடமிருந்து பெறப்பட்டது.
மார்ஷ் ஓய்வு பெறும்வரை அந்தப் பாடலை அவரே பாடிவந்தார். பின்னர் அது ஆலன் பார்டரிடம் கை மாறியது. இப்படியாக நாதன் லயனிடம் கடந்த 2013-இல் மைக் ஹசியிடமிருந்து பெறப்பட்டது.
ஆஸி. சாங் மாஸ்டர்
13 ஆண்டுகளாக இந்தப் பொறுப்பை வைத்திருந்த லயன் தற்போது அதனை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் அளித்துள்ளார்.
2023 ஆஷஸ் தொடரில் லயன் இல்லாதபோது இந்தப் பாடலை அலெக்ஸ் கேரி பாடும்படி கூறினார்.
இது குறித்து லயன் கூறியதாவது:
பாட்டு பாடும் கடமையை எனது நல்ல நண்பர் அலெக்ஸ் கேரியிடம் ஒப்படைக்கிறேன். அவர் அதற்குச் சரியான நபர். நான் எனது ஓட்டத்தை ஓடி முடித்துவிட்டேன். தற்போது, அதனை வேறொருவர் தொடர்வார்.
இதைப் பலநாள்களாக நினைத்துக்கொண்டு இருந்தேன். இதற்காக நான் ஓய்வுபெறப்போவதில்லை. அது குறித்து நான் சிந்திக்கவே இல்லை.
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடந்த 13 ஆண்டுகளாக இந்தப் பெருமையைச் செய்து வந்தேன். முதல் டெஸ்ட்டுக்குப் பிறகு அலெக்ஸ் கேரியின் அறைக்குச் சென்று கடிதம் எழுதிக் கொடுத்தேன். முதலில் கேரி பின்வாங்கினாலும் பின்னர் ஏற்றுக்கொண்டார் என்றார்.
ஆஸி. சாங் மாஸ்டர் பொறுப்பை வைத்திருந்தவர்கள்
ரோட் மார்ஷ் - 1974இல் பெற்றார்.
ஆலன் பார்டர் - மார்ஷ் ஓய்வுக்குப் பிறகு பெற்றார்.
டேவிட் பூன் - ஆலன் பார்டர் கேப்டனான பிறகு பெற்றார்.
ஐயான் ஹீலி - டேவிட் பூன் ஓய்வுக்குப் பிறகு பெற்றார்.
ரிக்கி பாண்டிங் - ஹீலி ஓய்வுக்குப் பிறகு பெற்றார்.
ஜஸ்டின் லாங்கர் - பாண்டிங் டெஸ்ட் கேப்டனான பிறகு பெற்றார்.
மைக் ஹசி - லாங்கர் ஓய்வுக்குப் பிறகு பெற்றார்.
நாதன் லயன் - மைக் ஹசி ஓய்வுக்குப் பிறகு பெற்றார்.
அலெக்ஸ் கேரி - தற்போது லயன் கைமாற்றியுள்ளார்.
'End of an era': Nathan Lyon passes traditional Aussie job of Song master to teammate alex carey. still he says not to think of retirement.