செய்திகள் :

விசாரணை என்ற பெயரில் கொலை! அடிப்பதற்காகவா காவல்துறை? - நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி

post image

திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரியா கிளீட் ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் மனுதாரர் தரப்பில், "இந்த வழக்கை காவல் துறை உரிய முறையில் விசாரிக்கவில்லை, அஜித் குமார் மரணமடைந்த பின்னரே நகை காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

வழக்கை விசாரித்த தலைமைக் காவலர் கண்ணன், மானாமதுரை டிஎஸ்பி சிறப்புப் பிரிவை சேர்ந்தவர். இவர் அங்கிருந்து திருப்புவனம் வந்து விசாரித்தது விதிமீறுவதாகவே பார்க்கப்பட வேண்டும்" என்று பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், தமிழக காவல்துறையிடம் அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

"நகை காணாமல் போன வழக்கில் முதல் தகவல் அறிக்கை ஏன் உடனே பதிவு செய்யப்படவில்லை? யாருடைய உத்தரவின் பேரில் விசாரணை, சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது? சிறப்பு படையினர் தாங்களாகவே வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளதா? உடனடியாக எஸ்.பி.யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது ஏன்? புலனாய்வு செய்யத்தானே காவல் துறை இருக்கிறது அடிப்பதற்காகவா காவல்துறை இருக்கிறது?" என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,

திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறி, நீதித்துறை நடுவர் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

நெகிழ்ச்சி சம்பவம்! 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்!

பிகாரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் திருநெல்வேலியில் நடந்துள்ளது.சுமார் 20 ஆண்டுகளாக மனநலப் பாதிப்பால் குடும்பத்தை விட்டுப்... மேலும் பார்க்க

காவல்துறை என்ற மனித மிருகங்கள்: திமுக எம்எல்ஏ கடும் விமர்சனம்!

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் காவலர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இருதயராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையால் ... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: அஜித்குமார் குடும்பத்தாருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காவல் துறைக்கு பெரும் களங்கத்த... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும்!

சிவகங்கையில் காவல் துறையினர் தாக்கியதில் மரணமடைந்த அஜித்குமாரின் கொலை வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம... மேலும் பார்க்க

வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர்! ரூ.12,000 ஊக்கத்தொகை!

சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் கலந்து கொண்டு, "வெற்றி நிச்சயம்" திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1)தொடங்கி வை... மேலும் பார்க்க

பரமக்குடி - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை மத்திய ... மேலும் பார்க்க