கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கவலைக்கிடம்!
கேரள முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் கடந்த 2019-ஆம் ஆண்டு பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டார். இந்தநிலையில், கடந்த ஜூன் 23-ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறலும் மாரடைப்பும் ஏர்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
வயது முதிர்வால் அவரது உடல் மருத்துவ சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று மருத்துவர்கள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. எனினும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், அவரது சிறூநீரக செயல்பாடு மோசமாகியுள்ளதாகவும், ரத்த அழுத்தமும் சீராக இல்லையென்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர் கடந்த ஒரு வாரமாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு கேரள அரசின் உத்தரவின்பேரில் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து 7 சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழு, அவரது உடல்நிலையை கண்காணிக்க விரைந்துள்ளது.
VS Achuthanandan as condition remains critical