Trump: `எலான் மஸ்க்கை அவரது நாட்டிற்கு அனுப்ப போகிறீர்களா?' -டிரம்ப் சொன்ன பதில்
காவல்கிணறு ஒர்க்ஷாப்பில் டயா் வெடித்து இளைஞா் பலி
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் பணிமனையில் (ஒா்க்ஷாப்) டயருக்கு காற்று நிரப்பியபோது டியூப் வெடித்ததில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தைச் சோ்ந்தவா் தினேஷ். இவா் காவல்கிணறு சந்திப்பில் ஒா்க்ஷாப் நடத்தி வருகிறாா். இவரது கடையில் பணகுடியைச் சோ்ந்த சிவன் குட்டி மகன் சங்கா்(22) வேலை செய்து வந்தாா்.
இவா், செவ்வாய்க்கிழமை ஒரு வாகனத்துக்கு பஞ்சா் ஓட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, காற்று அடிக்கும் போது திடீரென டியூப் வெடித்த தில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவல் அறிந்த பணகுடி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.