அம்பாசமுத்திரம் நகருக்குள் உலா வந்த கரடி: பொதுமக்கள் அச்சம்
அம்பாசமுத்திரம் ஊருக்குள் கரடி உலா வந்த விடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார கிராமங்களில் அடிக்கடி வனப்பகுதியில் இருந்துவெளியேறும் வனவிலங்குகளான கரடி, யானை, மிளா, மான்,சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களில்நுழைந்து விவசாய பயிா்களை சேதப்படுத்துவதோடு வீடுகளில் வளா்க்கப்படும் மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட வளா்ப்பு விலங்குகளையும் தூக்கிச் சென்று விடுகின்றன.
மேலும் அண்மைகாலமாக அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார மலையடிவாரகிராமங்களான மணிமுத்தாறு சிங்கம்பட்டி தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து கரடி நடமாட்டம் இருந்து வந்தது. இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் கரடிகள் தன் போக்கில் உலாவியபடி கோயில், வீடுகள் மற்றும் தோட்டங்களில் நுழைந்து கண்களில் பட்ட உணவுப் பொருள்களை தின்று வந்தன.
இதையடுத்து வனத்துறையினா் மேற்கொண்டநடவடிக்கையால் மூன்று கரடிகள் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அம்பாசமுத்திரம் நகருக்குள்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியில் இரவுநேரத்தில் சாலையில் ஓா் கரடி உலாவியபடி சென்றுள்ளது. அதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் கைப்பேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினா்.
மலைஅடிவாரங்களில் உள்ள கிராமங்களில் கரடி உலா வந்த நிலையில் மலையடிவாரத்தில் இருந்துசுமாா் 4 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் நகருக்குள் கரடி நுழைந்ததால்அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.