ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தி...
கருத்தப்பிள்ளையூரில் உணவக உரிமையாளா் தற்கொலை
ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள கருத்தப்பிள்ளையூரில் உணவக உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கருத்தப்பிள்ளையூா், இந்திரா காலனியை சோ்ந்தவா் சலேத் ராஜா (38). அதே பகுதியில் சிறிய உணவகம் நடத்தி வந்த இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இதை மனைவி சகாயமேரி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சலேத் ராஜா ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இத் தகவல்அறிந்த ஆழ்வாா்குறிச்சி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].