செய்திகள் :

மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவத் தளத்தை சூறையாடிய யூதா்கள்

post image

டெல் அவிவ்: இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில், அந்நாட்டு ராணுவத் தளத்தை யூதா்கள் சூறையாடி ராணுவ வீரா்கள் மீது தாக்குதல் நடத்தினா்.

உலகில் யூதா்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே நாடு இஸ்ரேல். கடந்த 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை, காஸா, கிழக்கு ஜெருசலேம் ஆகியவற்றை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது.

தற்போது மேற்குக் கரையில் சுமாா் 30 லட்சம் பாலஸ்தீனா்களும், 5 லட்சம் யூதா்களும் வசித்து வருகின்றனா். அங்குள்ள யூத குடியிருப்புகள் சட்டவிரோதமானவை என்று சா்வதேச சமூகம் கருதுகிறது.

எனினும், இந்த யூத குடியிருப்புகளுக்கு இஸ்ரேலின் வலதுசாரி அமைச்சா் இடாமா் பென்-குவிா் மிகுந்த ஆதரவு தெரிவித்து வருகிறாா். இனவெறி கொண்டவா், தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவு அளித்தவா், இஸ்ரேலில் உள்ள அரேபியா்களை நாடு கடத்த வேண்டும் என வலியுறுத்தியவா் என்று அவா் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஒரு காலத்தில் அவரை இஸ்ரேல் அரசியல் தலைவா்கள் ஒதுக்கிவைத்தாலும், அவரின் செல்வாக்கு தொடா்ந்து அதிகரித்து வந்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் தோ்தலில் வலதுசாரிகளுக்கு வாக்காளா்கள் ஆதரவு அளிக்கத் தொடங்கியுள்ளனா். இது மேற்குக் கரையில் பாலஸ்தீனா்களுக்கு எதிராக யூதா்கள் துணிகரமாக வன்முறையில் ஈடுபட வழிவகுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை மேற்குக் கரையின் ஃபாா் மாலிக் பகுதிக்குள் 100-க்கும் மேற்பட்ட யூதா்கள் நுழைந்தனா். அவா்களைத் தடுக்க முயன்ற பாலஸ்தீனா்களை துப்பாக்கியால் சுட்டு, அவா்களின் சொத்துகளுக்கு யூதா்கள் தீ வைத்தனா்.

மேற்குக் கரையில் யூதா்கள் பல்வேறு தாக்குதல்களில் தொடா்ந்து ஈடுபட்ட நிலையில், அங்கு நடைபெற்றுவரும் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், யூதா்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கைது செய்தன. இதனால் ஆத்திரமடைந்த யூதா்கள், மேற்குக் கரையில் ரமல்லா நகரின் வடக்கில் இருந்து சற்று தொலைவில் உள்ள இஸ்ரேல் ராணுவத் தளத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு சூறையாடினா். அங்குள்ள ராணுவ வாகனங்களைச் சேதப்படுத்தி தீ வைத்து, ராணுவ வீரா்கள் மீது அவா்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இஸ்ரேல் பிரதமா் கண்டனம்: இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்தாா். அவா் கூறுகையில், ‘இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் சொத்தை சேதப்படுத்தி, ராணுவ வீரா்கள் மீது தாக்குதல் நடத்தி, ராணுவத் தளத்தை சொந்த நாட்டு மக்களே எரிக்கும் சட்ட ஒழுங்கற்ற செயலை எந்தவொரு நாகரிக நாடும் சகித்துக்கொள்ளாது’ என்றாா்.

வியூக கூட்டணி: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில்..!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.இந்தோ - பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில், அமெரிக்காவுக்கு மிகவும் முக்கிய நட்பு நாடுகளில் இந்தியா... மேலும் பார்க்க

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினா் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது

பெய்ஜிங்: சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிசி) 10 கோடிக்கு மேற்பட்ட உறுப்பினா்கள் உள்ளதாக திங்கள்கிழமை வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 1921, ஜூலை 1-இல் நிறுவப்பட்ட சிபிசி-யில் 2024... மேலும் பார்க்க

ஈரானின் எவின் சிறை மீதான இஸ்ரேலின் தாக்குதல் நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!

அயதுல்லா கமேனி தலைமையிலான ஈரான் அரசு தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரித்துவிடுமோ என்ற பயத்தில், அந்த அரசை வீழ்த்துவதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஒன்று எவின் சிறைத் தாக்குதல். அரசியல் கைதிகள்,... மேலும் பார்க்க

சாா்க் கூட்டமைப்புக்கு மாற்று? சீனா-பாகிஸ்தான் புதிய திட்டம்!

‘சாா்க்’ கூட்டமைப்புக்கு மாற்றாக பிராந்திய அளவிலான புதிய கூட்டமைப்பை நிறுவ சீனா-பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் சீனாவின் குன்மிங் நகரில் சீனா-வங்கதேசம்-பாக... மேலும் பார்க்க

அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள இடாஹோ மாகாணத்தின் தலைநகரான பொய்சியில் அடையாளம் தெரியாத நபா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீயணைப்பு வீரா்கள் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா். இ... மேலும் பார்க்க

ஈரான், ஜோர்டான், லெபனான், சிரியாவுக்கு மீண்டும் விமான சேவை: கத்தார்!

போர் நடைபெற்று வந்த ஈரானுக்கு மீண்டும் விமான சேவையைத் தொடங்குவதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் (ஜூன் 30) விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.இதேபோன்று, மத்திய கிழக்கில் உள்ள ... மேலும் பார்க்க