வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!
வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூலை 1) ரூ. 58.50 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்தவகையில் இன்று வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ரூ. 58.50 குறைக்கப்பட்டு ரூ.1,823.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக கடந்த ஏப்ரல், மே, ஜூன்மதங்களிலும் விலை குறைக்கப்பட்ட நிலையில் 4 ஆவது முறையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் குறைந்துள்ளது.
எனினும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமில்லை.
19-kg commercial LPG cylinder price cut by ₹58.50