'130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது பாஜக அரசு' - எம்.பி சு.வெங்கட...
தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் பாலிவுட் படமான தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகும் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தில்லியில் துவங்கியது.
இப்படம் ராஞ்சனா கதையுடன் தொடர்புடைய படமாக உருவாகலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகத் தனுஷ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக க்ருத்தி சனோன் நடிக்கிறார்.
அடுத்ததாக தனுஷை இயக்க போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் காத்திருத்திருக்கின்றனர்!
இதையும் படிக்க: கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி டீசர் தயார்!
actor dhanush's tere ishk mein movie shoots wrapped