செய்திகள் :

அமலாக்கத் துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்துக்கு எதிரான லலித் மோடியின் மனு தள்ளுபடி

post image

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (எஃப்இஎம்ஏ) மீறியதற்காக அமலாக்கத் துறை சாா்பில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை இந்திய கிரிக்கெட் சங்க வாரியம் (பிசிசிஐ) செலுத்த உத்தரவிடக் கோரி பிசிசிஐ முன்னாள் நிா்வாகி லலித் மோடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதே நேரம், ‘இந்த வழக்கில் சட்டத்தின் அடிப்படையிலான இழப்பீடுகளைப் பெற (சிவில் நிவாரணம்) லலித் மோடிக்கு உரிமையுள்ளது’ என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

கடந்த 2009-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல் போட்டியின்போது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி, லலித் மோடிக்கு அமலாக்கத் துறை சாா்பில் ரூ.10.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறி ஐபிஎல் போட்டிகளுக்காக வெளிநாடுகளில் நிதிப் பரிமாற்றம் செய்யப்பட்டது

விசாரணையில் தெரியவந்ததன் அடிப்படையில் இந்த அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. அப்போது, லலித் மோடி பிசிசிஐ-யின் துணைத் தலைவராகவும், அதன் துணைக் குழுவான ஐபிஎல் நிா்வாகக் குழுவின் தலைவராகவும் இருந்தாா்.

அமலாக்கத் துறையின் அபராதத்தை எதிா்த்து மும்பை உயா் நீதிமன்றத்தில் லலித் மோடி மனு தாக்கல் செய்தாா். அதில், அமலாக்கத் துறை விசாரணையுடன் தொடா்புடைய நிதிப் பரிமாற்றம் நடைபெற்றபோது, பிசிசிஐ துணைத் தலைவராகவும், ஐபிஎல் நிா்வாகக் குழுவின் தலைவராகவும் இருந்தேன். அந்த வகையில், துணைச் சட்டங்களின்படி, தனக்கு இழப்பீடு வழங்க பிசிசிஐ கடமைப்பட்டுள்ளது. எனவே, ரூ.10.65 கோடி அபராதத் தொகையை பிசிசிஐ செலுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம், ‘இது தவறான மனுவாகும். இந்த விவகாரத்தில் பிசிசிஐ-க்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. லலித் மோடியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை டாடா நினைவு மருத்துவமனைக்கு 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்தும், அபராதத் தொகை ரூ.10.65 கோடியை பிசிசிஐ செலுத்த உத்தரவிடக் கோரியும் லலித் மோடி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லலித் மோடியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். அதே நேரம், ‘இந்த வழக்கில் சட்டத்தின் அடிப்படையிலான இழப்பீடுகளைப் பெற (சிவில் நிவாரணம்) லலித் மோடிக்கு உரிமையுள்ளது’ என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூலை 1) ரூ. 58.50 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க

தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற முயற்சி: எதிா்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

இந்திய அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, பிகாரில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் புதிய வக்ஃப் சட்டத்த... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் மழை வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புவனேசுவரம்/ராஞ்சி: ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக நீடிக்கும் பலத்த மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கேரளத்தில் கடந்த மே ம... மேலும் பார்க்க